ஷாக் அடிக்குதே மின்சார கட்டணம்..! அரசாங்கம் அடுத்த கொள்ளையை ஆரம்பிச்சாச்சு.

மின்சாரக் கட்டணத்தைப் பார்த்து ஒவ்வொரு குடும்பமும் வயிற்றெரிச்சல் பட ஆரம்பித்துள்ளனர். இரண்டு மாதங்கள் கட்டணம் கட்டுவதற்கு விலக்கு அளித்ததற்கு சேர்த்து பகல் கொள்ளை நடக்கிறது இப்போது.


மூன்று மடங்கு நான்கு மடங்கு கட்டணம் வந்துள்ளது என்று பலரும் கொதித்துப் போயிருக்கிறார்கள். இது ஒரு மிகச்சிறிய ஏமாற்று வேலை அல்ல, கொடுமையான பகல் கொள்ளை. ஆம், ஏப்ரல் மாதத்தில் கட்டணம் வந்திருக்க வேண்டும் ஆனால் ரீடிங் எடுக்க முடியாதது என்பதால் பிப்ரவரி மாதத்தில் வந்த பில் கட்டணத்தையே செலுத்த முடிந்தால் செலுத்தலாம் இல்லை என்றாலும் கவலை இல்லை என்று வாரியம் அறிவித்தது.

அது மிகவும் நியாயமான செயல், நோய் தொற்று ஆரம்பித்திருந்த நாட்களில் ஊழியர்கள் வீடுகளுக்கு செல்லமுடியாது என்பதால் முந்தைய பில் கட்டணத்தையே செலுத்தச்சொன்னார்கள். ஆனால் ஜூன் மாதம் ஆயிரக்கணக்கில் தினமும் தொற்று வந்தாலும் வீடுகளுக்கு வந்து ரீடிங் எடுத்துக்கொண்டு போய் ஷாக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். 

இது குறித்து இன்று வெளியான ஒரு பதிவு இது. ஒரு சின்ன கணக்கு மூலம் பகல்கொள்ளையை விளக்குகிறார். மாதம் 500 யூண்ட் பயன்படுத்துகின்றேன் என வைத்துக்கொள்வோம். பிப்ரவரி பயன்பாடு 500 யூனிட் - பில் ரூபாய் 1130 ஏப்ரல் பயன்பாடு 500 யூனிட் - பில் ரூபாய் 1130 வந்திருக்க வேண்டும் ஆனால் ரீடிங் எடுக்க முடியாததால் அதே கட்டணத்தை செலுத்தினோம்.

ஜூன் மாதம் பயன்பாடு 500 யூனிட் என்றால், பில் கட்டணம் வந்திருக்க வேண்டியது எவ்வளவு? ரூபாய் 1130 சரி ஏப்ரல் மாதம் கட்டமுடியவில்லை. ஆன்லைன் வசதி இல்லை அல்லது ஊரில் இல்லை என்றாலும் ரீடிங் இல்லை. ஆகா 1130 + 1130 வந்திருக்க வேண்டும். இது வரையில் எல்லாம் சரியாக இருக்க? ஆனால் ஏப்ரல் மாதம் பில் கட்டியும் வந்திருக்கும் பில் - 3950 ரூபாய் சொச்சம். கட்டாமல் இருந்தால் ரூபாய் 5,080/-_.

யூனிட் கணக்கீடு 4 மாதத்திற்கானது. அதனை இரண்டாக வகுத்து தனித்தனியே கணக்கிட்டு மொத்த கட்டணத்தினை கணக்கிட்டு இருக்க வேண்டும். அதாவது மார்ச்-ஏப்ரல் 500 யூனிட் (1130 ரூபாய்) + மே- ஜூன் 500 யூனிட் (1130)

ரூபாய் 2260 வந்திருக்க வேண்டும். ஆனால் வந்திருப்பது ரூபாய் 5080. ஆக ஒரு வீட்டில் மொத்த ஸ்வாகா சுமார் 3000 ரூபாய். கணக்கிடும் அந்த சாப்ட்வேரில் இந்த சின்ன மாற்றத்தினை செய்திருக்க வேண்டும். ஆனால் அதனை மாற்றத்தயாராக இல்லை. ஆனால் கொத்தித்து எழும் பயனாளர்களிடம் பாசமாக அன்பாக பதிலளிக்க கட்டளை பிறப்பித்து இருக்கின்றார்கள். ஆனால், எத்தனை பேரால் சண்டை போட்டு இதனை மீட்க முடியும்..?

இன்னும் எத்தனை கொரோனா கொடுமையைப் பார்க்கப் போறோமோ..?