கவர்னராக பதவி ஏற்ற அடுத்த நிமிடம் தமிழிசை செய்த செயல்! அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் திகைத்து நின்றனர்!

ஆளுநராக பதவி ஏற்ற அடுத்த நிமிடம் அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைக்கும் வகையில் தமிழிசை செய்த செயல் அனைவரையும் திகைப்பும் நெகிழ்ச்சியும் அடையச் செய்தது.


தெலுங்கானா மாநிலத்தின் முதல் முழு நேர ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்பு பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்ட தமிழிசை ஆளுநராக பதவி ஏற்பதன் அடையாளமாக கோப்பில் கையெழுத்திட்டார். இதன் பிறகு அவர் தெலுங்கானாவின் ஆளுநரானார்.

இதனை தொடர்ந்து ஆளுநர் தமிழிசை உடனடியாக மேடையில் இருந்து கீழே இறங்கிச் சென்றார். விழா முடிவடையாத நிலையில் ஆளுநர் மேடையில் இருந்து கீழே இறங்கியது அதிகாரிகளுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூட ஆளுநர் கீழே இறங்கிய போது தனது சேரில் இருந்து எழுந்தார்.

நேராக மேடைக்கு கீழே சென்ற தமிழிசை ஏன் அங்கு செல்கிறார் என பலரும் குழம்பினர். ஆனால் தமிழிசை அங்கு மேடைக்கு கீழே முதல் வரிசையில் அமர்ந்திருந்த தனது தந்தை குமரி அனந்தனிடம் சென்று கால்களில் விழுந்து ஆசி பெற்றார். உணர்ச்சிப் பெருக்கால் குமரி அனந்தன் கண்கள் கலங்கின.

ஆளுநராக பதவி ஏற்ற கையோடு நேராக தனது தந்தையிடம் சென்று தமிழிசை ஆசி பெற்றது பலரையும் நெகிழ வைத்தது.