பேட்ட படத்தின் வசூல் ரூ.250 கோடியை நெருங்குகிறது; ரஜினிகாந்த் பெரும் சாதனை

சென்னை: பேட்ட படத்தின் வசூல் ரூ.250 கோடியை நெருங்கி வருவதால், தென்னிந்திய சினிமாவில் இத்தகைய சாதனை படைத்த முதல் நடிகராக ரஜினிகாந்த் மாறியுள்ளார்.


பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டது. பாட்ஷா படத்திற்குப் பின், ரஜினிகாந்த் அதிரடியாக நடித்துள்ளதாகக் கூறப்படும் இந்த படம், உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 

அதற்கேற்ப, கார்த்திக் சுப்புராஜின் நேர்த்தியான இயக்கத்தில், ரஜினி மட்டுமின்றி, சிம்ரன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலரும் திறமையாக நடித்திருந்த இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில், பேட்ட படத்தின் வசூல், ரூ.250 கோடியை நெருங்கி வருகிறது. ஜனவரி 10ம் தேதியன்று வெளியான பேட்ட படம், இதுவரை உலக அளவில் ரூ.216.95 கோடி வசூலித்துள்ளது. தொடர்ந்து ரசிகர்களின் பேராதரவுடன், பேட்ட வசூல் ரூ.250 கோடியை நெருங்கி வருகிறது.  

சென்னை பாக்ஸ் ஆபிசில் பேட்ட படத்தின் வசூல் ரூ.14.06 கோடியாகவும், அமெரிக்க பாக்ஸ் ஆபிசிஸ் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் உள்ளது. அதேசமயம், பேட்ட படத்துடன் மோதிய அஜித்தின் விஸ்வாசம் படத்தின் வசூல் இதைவிட குறைவுதான் என்று கூறப்படுகிறது. அமெரிக்க பாக்ஸ் ஆபிசில் ரஜினியின் படங்கள் மட்டுமே, இத்தகைய வசூல் சாதனையை நிகழ்த்தி வருகின்றன. இதன்மூலமாக, தென்னிந்திய அளவில், முதல் நடிகராக ரஜினி உருவெடுத்துள்ளார். 

ஏற்கனவே, ஷங்கர் இயக்கத்தில் இவர் நடித்த 2.0 படம், தமிழ், தெலுங்கு, இந்தி, உள்ளிட்ட மொழிகளில், இதுவரை ரூ.713,50 கோடி வசூலித்துள்ளது, இந்திய சினிமாவில் பெரும் சாதனையை நிகழ்த்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.