பப்பாளி சாப்பிட்டால் கரு கலைந்துவிடுமா?

ஒரு பெண்ணின் கரு கலைந்துபோவதற்கு ஏராளமான காரணிகள் உண்டு. ஆனால் கர்ப்பம் தரித்த பெண்கள் பப்பாளியை பார்ப்பதுகூட கருவை கலைத்துவிடும் என்று இப்போதும் பலர் எச்சரிக்கை செய்வதுண்டு. பப்பாளியை பற்றி சொல்லப்படும் கருத்து உண்மையா என்று பார்க்கலாம்.


• பப்பாளி மட்டுமின்றி அன்னாசிப்பழம் சாப்பிடுவதும் அபார்ஷன் ஏற்படுவதற்கு வழி வகுத்துவிடும் என்று பலரும் எச்சரிக்கை செய்வதுண்டு.

• பப்பாளி மற்றும் அன்னாசிப்பழம் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஊறும் விளைவிப்பதில்லை என்பதுதான் உண்மை.

• ஆனால் பப்பாளி சாப்பிடுவது பெண்களின் கருப்பையில் சில எதிர்விளைவுகள் உண்டாக்குவதற்கு வாய்ப்பு உண்டு என்பதை மருத்துவம் ஏற்றுக்கொள்கிறது.

• அதனால் கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள், பிரசவம் முடியும் வரையிலும் பப்பாளிப் பழம் சாப்பிடாமல் ஒதுக்குவதே நல்லது.

என்றாவது ஒரு நாள் சிறிய அளவு பப்பாளி சாப்பிடுவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது பப்பாளியை வேகவைத்து அல்லது சாறு எடுத்துக் குடித்தால் குழந்தைக்கு நல்லது என்று சொல்வதிலும் உண்மை இல்லை. அதனால் இந்தப் பழங்களை கர்ப்பிணிகள் முழுமையாக ஒதுக்குவதே நல்லது. .