சைக்கிளில் வேகமாக வந்த குரங்கு..! திடீரென பச்சிளம் குழந்தையை இழுத்துக் கொண்டு ஓடிய பயங்கரம்..! பதற வைக்கும் வீடியோ உள்ளே!

இந்தோனேஷியாவில் வித்தை காட்டி கொண்டு இருந்த குரங்கு ஒன்று திடீரென குழந்தையை தூக்கி செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பார்போரை பதறவைக்கச் செய்துள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.


இந்தோனேஷியா நாட்டில் உள்ள ”Tanjungsari ” கிராமத்தில் ஒருவர் தனது குரங்கை வைத்து பொதுமக்களிடையே வித்தை காட்டிக்கொண்டிருக்கிறார். அந்த வித்தை நிகழ்ச்சியில் குரங்காட்டி நபர் தனது குரங்கை சைக்கிள் ஒன்றை ஓட்டும்படி சொல்ல, அதனை கேட்ட அந்த குரங்கும் வேகமாக சைக்கிள் ஓட்டியது. 

அப்படியே, மாற்றி மாற்றி சைக்கிள் ஓட்டி கொண்டு இருந்த குரங்கு, திடீரென் ஒரு வழியில் சென்றது. அங்கு ஒரு பெண்ணும் அவரது மூன்று குழந்தைகளும் அமர்ந்து இருந்தனர். அப்போது இந்த குரங்கு சைக்கிளை விட்டு விட்டு, சட்டென எழுந்து அந்த பெண்ணிடம் இருந்த குழந்தைகளில் இளைய குழந்தையை தன்னுடன் தரதரவென இழுத்துக்கொண்டு ஓடுகிறது.

இதனை கண்ட அந்த குழந்தையின் தாய் பதறி கதறினார். வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த பொதுமக்கள் அனைவரும் அதிர்ந்துபோய் சத்தமிட தொடங்கினர். இதனையடுத்து கூட்டத்தில் இருந்த ஒருவர் குச்சி ஒன்றை எடுத்துக்கொண்டு சத்தமிட்டபடியே அந்த குரங்கைத் துரத்தத் தொடங்கினார். அதன்பின் அந்த குரங்கு அந்த குழந்தையை விட்டு ஓடியது.

இந்நிலையில், குரங்கை பிடிக்கும் நோக்கத்தில் சென்ற நபர் கோபத்தில் அதைப் பிடித்து வேகமாக இழுக்க தெருவின் மறுமுனையில் சென்று விழுந்துள்ளது அந்தக் குரங்கு. இதுவும் அந்த வீடியோகாட்சிகளில் பதிவானது. 

சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைப் பார்த்த பலரும், முதலில் குழந்தையை கொண்டு சென்ற குரங்கின் மீது கோபம் பட்டாலும், அந்த குரங்கை பிடித்த நபரின் செயல்களை கண்ட வலைதளவாசிகள் குரங்கை கொடுமைப் படுத்தியதால்தான் அது அவ்வாறு நடந்துகொண்டுள்ளது. என்று பலரும் குரங்கை வைத்து வித்தை காட்டிய நபரின் மீது கடுமையாக சாடியுள்ளனர். இப்படி பல விவாதங்களுக்கு உள்ளான இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.