பிரதம மந்திரி வேளாண்மை உதவித் திட்டத்தில் நடந்த மோசடி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரைத்த உண்மை!

பிரதம மந்திரி வேளாண்மை உதவித் திட்டத்தின் கீழ் இந்தியா முழுதும் 9.5 கோடி விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள். நான்கு மாதத்துக்கு ஒருமுறை ரூபாய் 2 ஆயிரம் ரூபாய் என்று வருடத்துக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.


இந்த திட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்கள் பயன்பெற்று, கிட்டத்தட்ட 110 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில், 18க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோசடியாக பணம் கையாடல் செய்தவர்களிடம் இருந்து பணம் மீட்கப்பட்டு வருகிறது. இந்த மோசடி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பேசினார். 

அதாவது, மத்திய அரசின் அறிவிப்பு படி, தாங்களே நேரடியாக பயன் பெறும் வகையில் இணையதளம் மூலம் பயனாளிகள் சேர்ந்தது தான் இந்த முறைகேட்டுக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார். மாநில அரசு மூலம் பயனாளிகள் பெற்று, நிதி வழங்கப்பட்டிருந்தால் இத்தகைய முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லையே.