முதல் முறை செக்ஸ்! சில சந்தேகங்களும் - அதற்கான விளக்கங்களும்! வயது வந்தவர்கள் கண்டிப்பாக படிக்கவும்!

திருமணத்துக்கு முன்பு மட்டுமன்றி, பின்பும், திருமணமாகி பல ஆண்டுகள் கழிந்தபின்பும் கூட தம்பத்யம் குறித்த சந்தேகங்களை வெளிப்படையாக கேட்க பலருக்கு கூச்சம் ஏற்படுவது உண்டு.


சிலர் பெரிய பிரச்சினைகளாக கருதுவது கூட வழக்கமாக பலரும் எதிர்கொள்ளும் சாதாரண பிரச்சினைகளாகவே இருக்கின்றன. அதற்கான தீர்வுகளும் எளிமையானவைதான். ஆனால் அச்சம் காரணமாக வெளியில் யாரிடமும் கேட்காமல் உள்ளேயே வைத்துக்கொண்டு பாதிக்கப்படுபவர்கள் தான் அதிகம்

புணர்ச்சி இன்ப நிலை: ஆண்கள் உடலுறவிலும், விந்து வெளிப்படும் போதும் புணர்ச்சி இன்ப நிலையை எட்டுகிறார்கள். பெண்கள் மத்தியில் இது வேறுபடுகிறது.  சிலர் மயக்க நிலையிலும், சிலர் கிறக்கமாகும் நிலையலும், சிலர் வியர்க்கும் நிலையிலும் புணர்ச்சி இன்ப நிலையை எட்டுவாதாக கூறுகின்றனர். 

எப்படி அறியலாம்? பெண் புணர்ச்சி இன்ப நிலையை அடைந்தால் அவரது இதயத்துடிப்பு மேலோங்கும், கடுமையாக அல்லது வேகமாக மூச்சு விடுவார்கள், கருவிழி தளர்ந்து போகும், உடலில் சிறிய அளவில் நடுக்கம் காணப்படும்.

கடுமை! பல பெண்கள் புணர்ச்சி இன்ப நிலை எட்டுவதில் கடினமாக உணர்வதாக கருதுகிறார்கள். இது ஒரு பிரச்சினை என்று கருதப்படும் நிலையில் சாதாரணமானதுதான் என்கின்றனர் மருத்துவர்கள். சில நேரங்கலில் தாங்கள் புணர்ச்சி இன்ப நிலை அடைந்ததை பெண்கள் அறிவதே இல்லை

காரணங்கள்? தாம்பத்திய உறவில் ஈடுபடும் முறை, வகைகளை அறியாமல் இருக்கலாம், துணையின் தீண்டல்கள் முறையற்று இருக்கலாம், சில ஆரோக்கிய நிலை, மருத்துவ நிலை பிரச்சனைகள் கூட புணர்ச்சி இன்ப நிலை அடைவதை கடினமாக்கலாம்.

மன அழுத்தம்! ஆரோக்கியம் சிறப்பாக இருந்தாலும்,  பெண்கள் மன அழுத்தம், பதற்றம் ஆகியவை புணர்ச்சி இன்ப நிலையில் சிக்கலை ஏற்படுத்தலாம். முடிந்தவரை ரிலாக்ஸாக இருக்கும் போது தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்.

ஓரல் செக்ஸ் வாய்வழியாக மற்றும் அந்தரங்க உறுப்புகளை தீண்டுதல் மூலம் பால்வினை நோய் தோற்று ஏற்பட வாய்ப்புகள் உண்டா என சிலருக்கு சந்தேகம் எழுகிறது. - உண்டு. எச்.ஐ.வி மட்டுமே பால்வினை நோய் தொற்று என கருதுகின்றனர். இது தவிர பல பால்வினை நோய்த் தொற்றுகள் உள்ளன.  க்ளெமிலியா, கொனோரியா, மற்றும் சிபிலிஸ் போன்றவை ஓரல் செக்ஸ் மூலமாக பரவ கூடிய பால்வினை நோய்கள். ஆன்டி-பயாடிக் போன்றவரை கொடுத்து இவற்றை குணப்படுத்திவிட முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இரத்தப்போக்கு! முதல் முறை உடலுறவில் ஈடுபட்டால் இரத்தப்போக்கு ஏற்படும் என்றும் அதை வைத்து முன்பே அவர் கன்னித்தன்மை இழக்காதவர் என்பதை அறிய முடியும் என்றும் சிலர் கருதுவது உண்டு. ஆனால் தடகள போட்டிகள், விளையாட்டு போட்டிகள், நடனம் கற்றுக் கொள்பவர்கள், அதிகமாக சைக்கிள் ஓட்டும் பெண்களுக்கு கன்னித்திரை முன்பே கிழிய வாய்ப்புகள் உண்டு. முதல் முறை உறவில் ஈடுபடும் போது அவர்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.

வலி! உடலுறவில் ஈடுபட்டால் வலி ஏற்படுமா என்ற அச்சம் பல பெண்களிடம் உண்டு. முதல் உறவின்போது பிறப்புறுப்பில் எலாஸ்டிக் தன்மை கொண்ட இடம் விரிவடையும் போது சிறிது வலி ஏற்படும். உறுப்பில் வறட்சியான நிலை இருந்தாலோ, லூப்ரிகன்ட் பயன்படுத்தாமல் உடலுறவில் ஈடுபட்டாலோ வலி ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இதுபோன்றுஎந்த காரணமும் இன்றி வலி ஏற்பட்டால் உரிய மருத்துவரை அணுகலாம்.

தாம்பத்தியம் என்பது வலி மிகுந்ததாக இருக்க கூடாது. முதல் முறை மட்டுமல்ல, எப்போதுமே உடலுறவில் ஈடுபடும் போது வலி ஏற்படும் வகையில் ஈடுபட கூடாது. நீங்கள் ஒவ்வொரு முறையும் மிகுந்த வலிக்கு ஆளானால், உங்கள் துணையிடம் வலுவாக ஈடுபட வேண்டாம் என்று கூறலாம். மேலும், சில குறிப்பிட்ட நிலைகளில் புணர்ச்சியில் ஈடுபடும்போதும் வலிக்கு வாய்ப்புகள் உண்டு.