மனைவி! குழந்தைகளை துடிக்க துடிக்க கொலை செய்த கொடூர நபர்! கேட்போரை பதற வைக்கும் சம்பவம்!

சென்னையில் கட்டிய மனைவி மற்றும் பெற்ற இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த ஆட்டோ ஓட்டுனரின் செயல் பதற வைக்கும் வகையில் இருந்துள்ளது.


   சென்னை கண்ணகி நகர் அடுத்த எழில் நகரை சேர்ந்தவர் பாபு. இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்தார். கடந்த ஒன்னறை வருடங்களாக எழில்  நகரில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் பாபு, விமலா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் பாபு தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து விமலாவிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கமாகியுள்ளது.

   இதனால் விமலா – பாபு இடையே  அடிக்கடி சண்டை நடைபெறும். இதனால் ஆத்திரமடையும் மனைவி விமலா திருக்கழுக்குன்றத்தில் உள்ள தாய் வீட்டிற்கு அடிக்கடி சென்றுவிடுவார். இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பும் விமலாவுடன் கணவன் பாபு சண்டையிட்டுள்ளார். இதனால் விமாலா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

  இதன் பிறகு நேற்று முன் தினம் பாபு தனது மனைவியை திருக்கழுக்குன்றம் சென்று சமாதானம் செய்து அழைத்து வந்துள்ளார். இனி குடிக்கமாட்டேன் என்று பாபு சத்தியம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி விமலா சென்னை எழில் நகருக்கு கணவன் வீட்டுக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.   

  இந்நிலையில் நேற்று மாலைக்கு பிறகு பாபு வீட்டின் தாழ்ப்பாள் போடப்பட்ட வீடு திறக்கப்படவில்லை. மேலும் வீட்டிற்குள்ளும் ஆள் நடமாட்டம் இருப்பது போல் தெரியவில்லை. அத்துடன் காலையில் தான் கணவன் – மனைவி இருவரும் மீண்டும் சண்டை போட்டுள்ளனர். காலையில் சண்டைபோட்ட நிலையில் மாலையில் எவ்வித சத்தமும் வீட்டிற்குள் இருந்து வராத காரணத்தினால் போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர்.

   போலீசார் வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பாபு மற்றும் விமலா தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளனர்.  அவர்களது குழந்தைகள் 6 வயதான கிஷோர், 4வயதான மகள் தியா இருவரும் கழுத்து நெறிக்கப்பட்டு படுக்கையில் சடலமாக கிடந்தனர். நான்கு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

  முதலில் மனைவியை கொலை செய்துவிட்டு, அவரை தூக்கில் ஏற்றிய பாபு பிறகு இரக்கமே இல்லாமல் குழந்தைகள் இருவரையும் கழுதை நெறித்து கொலை செய்துள்ளான். இதன் பிறகு பயத்தில் பாபுவும் தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். இது குறித்து கண்ணகி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பதறவைத்துள்ளது.