பேனர் வைக்கலாம் என்று நீதிமன்றமே சொல்லியாச்சு! எடப்பாடிக்கு செம ஹேப்பி!

இந்த நேரம் கனடாவில் இருக்கவேண்டிய சுபஸ்ரீ என்பவர் மரணம் அடைந்ததும், அனைத்து கட்சிகளும் பேனர் வைக்க மாட்டோம் என்று அறிவிப்பு செய்தார்கள். ஆனால், அந்த அறிவிப்பு எல்லாம் கண் துடைப்பு என்பது போன்று மீண்டும் வருகிறது பேனர்கள்.


இப்போது தமிழக அரசே முன்வந்து பேனர் வைக்கப்போகிறது. அதாவது வரும் 11, 12, 13 ஆகிய தினங்களில் பாரதப் பிரதமர் மோடியும் சீன அதிபரும் மாமல்லபுரத்துக்கு வருகை தருகிறார்கள். அவர்களை வரவேற்று பேனர் வைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், மக்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாத வகையில் பாதுகாப்பாக பேனர் வைக்கலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது. கட்சி சார்பில்தான் பேனர் வைக்கக்கூடாது, அரசு இதனை செய்யலாம் என்று அனுமதி கொடுத்துள்ளது.

தங்கள் வருகைக்காக பேனர் வைக்க வேண்டாம் என்று பாரதப்பிரதமர் மோடியே முன்வந்து சொல்லவேண்டும் என்று கமல்ஹாசன் சொன்னதை மோடியும் கேட்கவில்லை, எடப்பாடியும் செய்யவில்லை. 

எப்படி பேனர் வைச்சு வரவேற்கிறாங்கன்னு மட்டும் பார்த்துக்கிட்டே இருங்க மக்களே...