விஜய் படம் பார்க்கவிடாமல் ரிமோட்டை பரித்த சகோதரி! சகோதரன் எடுத்த விபரீத முடிவு! அதிர வைத்த சம்பவம்!

சகோதரனும் சகோதரியும் டிவி பார்க்க விடவில்லைலை என்ற விரக்தியில் கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.


சென்னை கோட்டூர்புரம் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பெய்லி சில்வன். இவர் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் இவர் நடிகர் விஜயின் தீவிர ரசிகர். சனிக்கிழமை அன்று வீட்டில் தொலைக்காட்சியில் விஜயின் பாடல்களை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது சகோதரியும் சகோதரனும் தங்களுக்கு பிடித்தமான சேனலை வைக்க சில்வனை வலியுறுத்தினர்.

இதில் வழக்கம்போல சகோதர சகோதரி இடையே பிரச்சனை ஏற்பட்டது. பிரச்சினையைத் தொடர்ந்து டிவி ரிமோட் கண்ட்ரோலை கீழே போட்டு உடைத்து விட்டு ஆத்திரத்துடன் சில்வன் வீட்டை விட்டு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.  புறப்பட்டு சென்ற அவர் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் கலக்கம் அடைந்தனர். நண்பர்கள் யாருடைய வீட்டிற்கும் அவர் செல்லவில்லை என்பதை உறுதி செய்தனர்.

இதை அடுத்து வீட்டின் மாடியில் உள்ள அவரது அறைக்குச் சென்று பெற்றோர் பார்த்தனர். அந்த அறையின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக தங்களது மகன் உள்ளே தான் இருக்கக்கூடும் என்று அவர்கள் கதவை பலமாக தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படாததால் உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது சில்வன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டிருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஜய் பட பாடல்களை பார்க்க விடாத ஆத்திரத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்தது கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் தற்கொலை முடிவுக்கு டிவி பார்க்கும் தகராறு தான் காரணமா? அல்லது வேறு எதுவுமா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.