முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.

நாங்கதான் தேசியக் கட்சி, நாங்கதான் கூட்டணிக்குத் தலைமை தாங்குவோம். தமிழகத்துக்கு முதல்வர் வேட்பாளர் யாருன்னு நாங்கதான் சொல்வோம் என்று இதுவரை பந்தா பண்ணிவந்த பா.ஜ.க. திடீரென பல்டியடித்து, முதல்வர் வேட்பாளரை ஏற்பதாக அறிவித்துவிட்டது.


இந்த பிரச்னையை முதன்முதலாக வானதி சீனிவாசன் தொடங்கிவைத்தார். முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பா.ஜ.க. சொல்லும் என்று ஆரம்பித்துவைத்ததை, மற்ற பா.ஜ.க.வினரும் வழிமொழிந்தனர். எல்லோரும் ரஜினி வருவார், அவர் முதுகில் சவாரி போகலாம் என்று ஆவலாக காத்திருந்தனர்.

ஆனால், அத்தனை பேருக்கும் ரஜினி அல்வா கொடுத்துவிட்டார். மேலும் மீண்டும் ஒரு முறை நான் அரசியலுக்கு வரப்போவதே இல்லை என்று தெளிவாகவே அறிவித்துவிட்டார். ஆகவே, வேறு வழியில்லாமல் சரண்டர் ஆக்கியுள்ளனர்.

இதுகுறித்து சி.டி.ரவியும் எல்.முருகனும், தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க.தான் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்யும் என்று இறங்கிவந்துள்ளனர். இனியாவது தங்கள் பலம் அறிந்து பா.ஜ.க. நடந்துகொள்ள வேண்டும்.