பிரபல செய்தி வாசிப்பாளர் துடிக்க துடிக்க கொடூர கொலை! காதலன் கைது!

பிரபல செய்தி வாசிப்பாளரை அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ததாக அவரது காதலனை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


பிரபல செய்தி வாசிப்பாளரை அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ததாக அவரது காதலனை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 


உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் செக்டார் 22 பகுதியில் உள்ள பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ராதிகா. இவர் ஜீ ராஜஸ்தான் சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். 25 வயதான இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஜீ ராஜஸ்தான் சேனலில் வேலை கிடைத்ததும் நொய்டாவில் குடியேறியுள்ளார்.

  ராதிகாவுடன் அவரது காதலரும் லிவிங் டு கெதர் பார்ட்னராக வசித்து வந்துள்ளார். நேற்று முன் தினம் இரவு ராதிகாவும், அவரது காதலரும் மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது- பால்கனியில் நின்றபடி மது அருந்திக் கொண்டிருந்த போது திடீரென ராதிகா அங்கிருந்து கீழே விழுந்துள்ளார். விழுந்த வேகத்தில் ரத்தம் சொட்ட சொட்ட துடிதுடித்து ராதிகா உயிரிழந்தார்.


  அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே ஓடி வந்த ராதிகாவின் காதலர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். விசாரணையில் ராதிகா பால்கனியில் இருந்து மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், தான் பாத்ரூம் சென்று இருந்த போது ராதிகா அலறும் சப்தம் கேட்டதகாவும், ஓடி வந்த பார்த்த போது அவர் கீழே ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும் கூறியுள்ளார்.

  இதனால் ராதிகா குடிபோதையில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என போலீசார் கருதினர். ஆனால் தங்கள் மகளுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்றும், ராதிகாவின் காதலன் தான் பால்கனியில் இருந்து தள்ளவிட்டு கொலை செய்திருக்கலாம் என்றும் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து ராதிகா மரணத்தை கொலை வழக்காக நொய்டா போலீசார் பதிவு செய்தனர்.

மேலும் ராதிகாவின் காதலனையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப்பரிசோதனை அறிக்கை வந்த பிறகே ராதிகாவின் மரணத்திற்கான காரணம் தெரிய வரும்.