பசுக்களின் மூச்சுக்காற்று நம் மீது பட்டால் போதும்! சகல பாக்கியங்களும் கிடைக்கும்!

ரமண மகரிஷியை தேடி ஒரு முறை ஒரு செல்வந்தர் வந்தார். வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர் அவர். சரியான கருமி. அவருக்கு உடலெங்கும் வெள்ளை வெள்ளையாய் படை போன்று வந்திருந்தது. எத்தனை எத்தனை பெரிய வைத்தியர்களிடம், ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டுகளிடம் காட்டியும் நோய் தீரவில்லை. ஒரு கட்டத்தில் ஆடையே உடுத்த முடியாத அளவு நோயின் தீவிரம் அதிகமானது.எரிச்சலிலும் வலியிலும் துடித்தார்.


ரமணரை போய் பார்த்தால் ஏதாவது தீர்வு சொல்வார் என்று யாரோ சொல்ல ரமணரை நாடி திருவண்ணாமலை வந்தார். பகவான் ரமணர் அவரை பார்த்து, நீ வட்டிக்கு விடுவதை முதலில் நிறுத்து. உன்னிடம் உள்ள செல்வத்தை கொண்டு ஏழை எளியோருக்கு தான தர்மங்கள் செய்.ஆஸ்ரமத்தில் உள்ள கோ-சாலையில் ஒரு மண்டலம் வேலை செய். பசுக்களை குளிப்பாட்டு, சாணத்தை அள்ளிப்போடு, கோ-சாலையை சுத்தம் செய்!”என்றார். செல்வந்தரும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டு, ஆஸ்ரமத்தின், கோ-சாலையில் வேலை செய்ய ஆரம்பித்தார்.

சரியாக, 48 நாள் கழித்து பார்த்தபோது ,அவரது உடலில் தோல் நோய் இருந்த தடயமே மறைந்து போய் அவருக்கு பரிபூரணமாக குணமாகியிருந்தது. பசுவின் சாணம், கோமியம், ஆகியவை நம் மேல்படுவது, பசுக்களின் மூச்சுக் காற்றை நாம் சுவாசிப்பதும், சஞ்சீவனியை விட சிறந்த மருந்து என்பது ரமணருக்கு தெரியாதா என்ன? தீராத தோல் நோய் உள்ளவர்கள், உங்கள் அந்தஸ்தை தூக்கி தூர போட்டுவிட்டு, ஏதேனும் கோ-சாலையில் தினசரி இரண்டு மணிநேரம் துப்புரவு பணியை செய்து பாருங்கள். கோ-சேவையின் மகத்துவம் புரியும். அனைத்து உயிரனங்களுக்கும் தோஷம் உண்டு. 

ஆனால் தோஷமே இல்லாத ஒரே உயிரினம் பசு மட்டுமே.ஒரு பசுவை ஒருநாள் பார்த்துக்கொண்டிருந்தாலும் தொழுவத்தில் இருந்தாலும், பார்ப்பவருக்கு பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகிவிடும் என்பது ஐதீகம். பிரம்மஹத்தி தோஷமே விலகும்போது சாதாரண தோல் நோய் குணமாகாதா?

* காலையில் எழுந்தவுடன் யாருடனும் பேசாமல், கீழ்கண்ட மந்திரத்தை கூறி பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுத்தால், புத்திரப் பேறு கிடைக்காத பெண்ணுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும். “சர்வ காமதுகே தேவி சர்வ தீர்த்தாபிஷேசினி, பாவனே சுரபி சிரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே”

பகவான் கோப்ராம்மணாசுதர் எனப்படுகிறார். கோவின் பாதத்துளி நம் உடலில் பட்டால் வாநவியஸ்நானம் செய்த பலன் கிட்டும். கோதுளிபட்ட அன்னத்தைச் சாப்பிடாது தூக்கி எறிந்ததால், சிறந்த சன்னியாசியாகிய வைசிகன் சண்டாளனாகப் பிறந்தான். கோவுக்குப் பணிவிடை செய்து திலீப மகாராஜன் ரகுவைப் பெற்றான்.

பசு காயத்ரீ மந்திரம்:-

ஓம் பசுபதயேச வித்மஹே மகா தேவாய தீ மஹி தந்தோ பசுதேவி: ப்ரசோதயாத்.

1 பசுவுக்கு ஒரு நாள் தண்ணீர் தந்தவன், அவன் நம் முன்னோர்கள் 7 தலை முறையைக் கரை ஏற்றி விடுவான்.