திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம்..! பெருக்கெடுத்தும் ஓடும் தண்ணீர்! அதிர்ச்சியில் ஆண்டிப்பட்டி!

ஆண்டிபட்டி அருகே உள்ள T. புதூர் கிராமத்தின் வழியாக செல்லும் 58ம் கால்வாயில் இன்று காலை உடைப்பு ஏற்ப்பட்டது


அணையிலிருந்து 100 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடும் நிலையில் தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால் பல ஏக்கர் விவசாய நிலங்கள் சேதம் பொதுப்பணி துறையினர் கண்மாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆண்டிபட்டி அருகே உள்ள 58 -ம் கால்வாயிலிருந்து உசிலம்பட்டி மற்றும் 58 கிராம பாசனத்திற்காக 100 கன அடி வீதம் பொது பணித் துறையினரால் திறந்து வைக்கப்பட்டது.தொடர்ந்து பெய்த கனமழையால் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சேர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 71 அடியில் 68 அடியை எட்டியது.இதன் காரணமாக வைகை அணையில் இருந்து உசிலம்பட்டி பெரியாறு திருமங்கலம் மற்றும் 58 கிராமங்களுக்கும் விவசாய பாசன வசதிக்காக வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் 58 கிராம பாசனத்திற்காக கால்வாய் திறக்கக்கோரி உசிலம்பட்டியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை வைத்தனர் கோரிக்கை வைத்து அதன் அடிப்படையில் இன்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனை ஏற்று 58 கிராம பாசன கால்வாய் காண மதகுகள் வழியாக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில்

இன்று 58 ம் கால்வாயிலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டி.புதூர் அருகே உடைப்பு ஏற்பட்டது.இன்று T. புதூர் அருகே 58ம் கால்வாய் உடைப்பு ஏற்பட்டதை தெரிந்த பொதுப்பணி துறையினர் உடனடியாக விரைந்து 58ம் கால்வாயில் தண்ணீரை நிறுத்தி ராட்சத கிரேன், ஜெஜிபி மூலம் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்இன்று மாலைக்குள் சரி செய்து தண்ணீர் திறந்துவிடப்படும் என்று பொதுப் பணித் துறையினர் தெரிவித்தனர்.