டைம்ஸ் தமிழ் 2018 சிறந்த நடிகர் விருது ரஜினிக்கா? விஜய்சேதுபதிக்கா..?

2018ம் ஆண்டின் சிறந்த நடிகர் யார் என்பதற்கான ஒரு நேர்மையான தேடல் இது


கடந்த வருடம் முதல் டைம்ஸ் தமிழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2018ம்  ஆண்டுக்கான சிறந்த திரைப்பட கலைஞர்களை கெளரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுக்கு கலைஞர்களை தேர்வு செய்யும் குழுவில் சினிமா இயக்குனர்கள், நடிகர்கள், திரைப்பட விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சினிமாரசிகர்கள்என 20 பேர் இடம்பெற்றுள்ளனர்.

அந்த வகையில் தேர்வுக் குழுவினரால், ஒவ்வொரு விருதுக்கும் இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள். இந்த இருவரில் இருந்து ஒருவருக்கு சிறந்தநடிகருக்கான விருதுடிசம்பர் 30ம் தேதி அறிவிக்கப்படும். இன்று சிறந்த நடிகருக்கான விருதுப் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் இரண்டு நட்சத்திரங்களின் பெயர்கள் வெளியிடப்படுகிறது.

இந்த ஆண்டு ஏராளமான திரைப்படங்கள் வந்திருந்தாலும், சிறந்த நடிகர் என்ற பிரிவுக்கு கடுமையான போட்டி தரும் வகையில் கலைஞர்களுக்கு நல்ல பாத்திரங்கள் அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தி, ராட்சசன் படத்தில் விஷ்ணு விஷால்,  பரியேறும் பெருமாள் படத்தில் கதிர் ஆகியோர் மட்டுமே சிறந்த நடிகருக்குத் தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு அருகே வந்த நடிகர்கள். சர்கார் படத்தில் விஜய்,  தனா சேர்ந்த கூட்டம் சூர்யா ஆகியோர் பரிசீலனைக்கே வரவில்லை.

மிகவும் எளிதாக சிறந்த நடிகர் விருதுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் தான் சிறந்த நடிகர் விருது பெறும் அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். இந்த இருவருடைய நடிப்புக்கும்முன்னே கார்த்தி, விஷ்ணுவிஷால், கதிர் ஆகியோர்நடிப்பு எடுபடவில்லை.

காலா படத்தில்ர ஜினிகாந்த், வயதுக்கு ஏற்ற வேடத்தில் இயல்பாக வாழ்ந்திருந்தார். பழைய காதலியைக்க ண்டு மருகுவதிலும், நானா படேகரின் வீட்டுக்குச்சென்று சவால் விடுவதிலும், , தனக்கு நிகரான நடிகர் யாரும் இல்லை என்பதை ரஜினிகாந்த் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். குடித்து விட்டு ரவுசு செய்வதிலும், மனைவியை கிண்டல் செய்வதும், மனைவி இறந்த துக்கத்தில் துவளுவதும் சூப்பர்ஸ்டாரேதான்.

   மகாநடிகன் என்று ரஜினியால் புகழப்பட்ட விஜய்சேதுபதி, 2018ம் ஆண்டில் ரஜினிக்கு கடுமையான போட்டி தரும் நடிகராகத் திகழ்கிறார். 96 படத்தில் விஜய் சேதுபதிக்குப் பதில் வேறு எந்த ஒரு நடிகரையும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்பது தான் விஜய் சேதுபதியின் வெற்றி. பழையகாதலியைப் பார்த்துவெட்கப்படுவதும், நீ வர்ஜினா என்று த்ரிஷா கேட்டதும் என்ன பேசுவது என்று புரியாமல் நெளிவதும் சபாஷ் விஜய்சேதுபதி.

ஆக, 2018ம்  ஆண்டு சிறந்த நடிகருக்கான டைம்ஸ் தமிழ் விருதை பெறப் போவது ரஜினிகாந்த் அல்லது விஜய் சேதுபதி ஆகிய இருவரில் ஒருவர்தான். ஆனால், அந்த விருதைப் பெறப்போகிறவர் யார் என்பதை அறிந்து கொள்ள 30ம் தேதி வரை காத்திருங்கள்.