அ.தி.மு.க. கூட்டணிக்கு ஓடிவந்த பா.ம.க. முதல்கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்.

ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் தங்களுடைய இருப்பை காட்டிக்கொள்ளும் வகையில் பா.ம.க. ஏதேனும் ஒரு விளையாட்டு காட்டும். அந்த வகையில், 20 சதவிகிதப் போராட்டத்தைக் கையில் எடுத்தது. ஆனால், உடனே ஆணையம் அமைத்து அந்த பிரச்னையை எடப்பாடி முடித்துவைத்தார்.


அதனால், வேறு வழியின்றி அ.தி.மு.க. கூட்டணியில் சேர்வதற்கு பணிந்துவிட்டார் ராமதாஸ். இதையடுத்து தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுடன் இன்று அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்குவது குறித்து இந்த பேச்சு வார்த்தையில் முக்கிய அம்சமாக இருக்கும் என்று சொல்லப்பட்டாலும் அதற்கான வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. 

ஏனென்றால், ஆணையத்தின் முடிவு வரும் வரையில் எக்காரணம் கொண்டும் அரசே அதனை அறிவிக்க முடியாது என்பதை அ.தி.மு.க. தெளிவாக எடுத்து வைத்துள்ளது. ஆகவே, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இந்த இட ஒதுக்கீடு குறித்து சேர்ப்பது குறித்து பேசப்பட்டு வருகிறது.

இன்றைய நிலையில் பா.ம.க.வுக்கு வேறு வழியே இல்லை என்ற நிலை இருப்பதால், கூட்டணிப் பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிவுக்கு வரும் என்பது உறுதியாகத் தெரிகிறது.