ராகுல் வருகையை ஒட்டி, தமிழகத்தில் பலமான கட்சியாக சித்தரிக்கப்பட்டு வருகிறது காங்கிரஸ். ஆனாலும் காங்கிரஸ் கட்சிக்கு குறைவான சீட் ஒதுக்கவே தி.மு.க. தயாராக இருக்கிறது என்பது அறிந்து, வெளியேற தயாராக இருக்கிறது காங்கிரஸ்.
காங்கிரஸ் கட்சிக்கு வந்த சோதனை... தி.மு.க. கூட்டணியில் உடைப்பு ஆரம்பம்..?
கடந்த எம்.பி தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெற்றது. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மோடி எதிர்ப்பும், வகைதொகையில்லாமல் அள்ளியிறைக்கப்பட்ட போலி வாக்குறுதிகளுமே இந்த வெற்றிக்கு முக்கிய காரணங்கள். ஆனால் ஏதோ தங்களால்தான் இந்த வெற்றி கிடைத்தது என திமுகவின் தலைமை எண்ணியது.
அதனால், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் இடப் பங்கீட்டில் கூட்டணி கட்சிகளிடம் ரொம்பவே கறார் காட்டி வருகிறது திமுக. காங்கிரசுக்கு அதிகபட்சம் 18 சீட்டுகள் என்பதுதான் திமுகவின் இப்போதைய நிலைப்பாடு.
ராகுல் வரை இந்த தகவல் தெரிந்து அவரும், மற்ற காங்கிரஸ் நிர்வாகிகளும் கடும் கோபத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். இதனால்தான் தனது சமீபத்திய தமிழக விசிட்டின்போது ராகுல் திமுக தரப்பை சந்திக்க ஆர்வம் காட்டவில்லையாம். அதுபோலவே இம்மாத மத்தியில் நிகழவிருக்கும் தென்மாவட்ட விசிட்டின்போதும் அவர் திமுகவினரை சந்திக்கும் திட்டம் இல்லை என்கிறார்கள்.
மேலும், எங்கள் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படுத்தும் திமுகவுடன் கூட்டணி தொடர வாய்ப்பு குறைவு. எனவே மாற்று ஏற்பாடுகளில் நாங்கள் மட்டுமல்ல, பிற கட்சிகளும் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றன. அரசியலில் அகந்தையால் அழிந்துபோன கட்சிகள் அநேகம் உண்டு. அந்த பட்டியலில் திமுகவும் இடம்பெறுவதை நாளைய வரலாறு சொல்லும் என்கிறார்கள்.
அப்படிப் போடுங்க