உலகின் மோசமான சாலைகளுக்கான தரவரிசை வெளியீடு! சென்னை, பெங்களூரு சாலைகளின் நிலை என்ன தெரியுமா?

உலகிலேயே சென்னையின் சாலைகள் தான் மிக மோசமான சாலைகள் என சமூக ஊடகங்கள் வாயிலாக நாம் தம்பட்டம் அடித்து வருகிறோம்.


இதையும் தாண்டி பெங்களூரு நகர சாலைகள் தான் இந்தியாவின் மோசமான சாலைகள் என சந்திரனில் நடப்பது போல குண்டும் குழியுமான சாலைகளை வீடியோ எடுத்து இணைய உலகை பரபரப்பாக்கினர் கன்னடர்கள். ஆனால் உலகத்திலேயே மிகமிக மோசமான சாலை எனும் பெருமையை தக்கவைத்து முதலிடத்தைப் பிடித்துள்ளது மங்கோலியா நாட்டின் சாலைகள்.

ஆம்.உலகின் மிக மோசமான சாலைகள் பற்றி ஆய்வு ஒன்றினை தயாரித்து அறிக்கையாக வெளிட்டுள்ளது இங்கிலாந்தை சேர்ந்த மிஸ்டர் ஆட்டோ எனும் கார் பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம்.

சாலைகளின் தரம், விபத்தின் காரணமான இறப்பு விகிதம், போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்றின் தரம் என 15 காரணிகளை கருத்தில் கொண்டு மிஸ்டர் ஆட்டோ நிறுவனம், உலகெங்கிலும் உள்ள சிறந்த மற்றும் மோசமான சாலைகளைக் கொண்ட நகரங்களைப் பற்றி தரவரிசைப் படுத்தியுள்ளது.

அந்த வரிசையின் அடிப்படையில் வாகன ஓட்டிகளுக்கு நண்பனாக விளங்கும் தரமான சாலையாக கனடாவின் கல்கரி நகரம் முதலிடத்திலும், துபாய் நகர சாலைகள் இரண்டாம் இடத்திலும் கனடாவின் ஒட்டாவா நகர சாலைகள் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. மேலும் ஜப்பான் நாட்டின் ஒசாகா மற்றும் டோக்கியோ சிங்கப்பூர் நகர சாலைகள் வாகன ஓட்டிகளுக்கு சிறந்ததாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது அந்த நிறுவனம்.

வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் இந்தியாவில் எந்த ஒரு நகர சாலைகளும் தரமான சாலைகள் பட்டியலில் இடம்பெறவில்லை.  உலகிலேயே மிக அதிக ஆபத்தான சாலைகள் பட்டியலில் மங்கோலிய தலைநகரம் உலகின் ஆப்பத்தான சாலைகளில் முதலிடம் வகிக்கிறது.

இந்த வரிசையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ, பாகிஸ்தானில் கராச்சி, இந்தியாவில் கொல்கத்தா மற்றும் மும்பை, நைஜீரியாவில் லாகோஸ் ஆகியவையும் முதல் ஆறு இடங்களைப் பிடித்துள்ளன. மாஸ்கோவுக்கு அடுத்தபடியாக மிக மோசமான இடமாக இஸ்தான்புல் விளங்குவதாகவும், ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சதுக்கம் அமைந்துள்ள சாலை தான் ஆபத்தின் உச்சமாக விளங்குவதாக தெரிவிக்கிறது.

ரஷ்ய தலைநகரம் மாஸ்கோ நகரம் வாகன போக்குவரத்து நெரிசல்களால் திணறிவருவதாகவும். 2018 ஆம் ஆண்டு மட்டுமே மாஸ்கோ நகரில் சுமார் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இதில் 465 பேர் இறந்துள்ளதாகவும், 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக மாஸ்கோ போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

தெற்கு இத்தாலிய துறைமுக நகரமான நேபிள்ஸ் மற்றும் ஐரிஷ் தலைநகர் டப்ளின் ஆகியவை ஆபத்து நிறைந்த சாலைகள் வரிசையில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. உலகிலேயே அதிகப்படியான சாலை விபத்துகள் இந்தியாவில்தான் நடைபெறுகின்றன என்று கூறுகிறது ஆய்வு ஒன்று. 

2016 கணக்கின்படி இந்தியாவில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 1 கோடியே 30 லட்சம் எனவும். இந்த வாகன போக்குவரத்து மூலமாக ஆண்டுகளுக்கு சராசரியாக 1 லட்சத்து 15 ஆயிரம் மரணங்களை ஏற்படுத்துகின்றன என்று கூறுகிறது இந்த‌ அறிக்கை. மேலும் 25 கோடிக்கும் மேல் வாகனங்கள் உபயோகப்படும் அமெரிக்காவில் கூட வருடத்துக்கு சராசரியாக 41 ஆயிரம் மரணங்களே நிகழ்கின்றன எனவும்.

இந்தியாவில் தினமும் 100 கார்களுக்கு ஒரு சாலை மரணம் ஏற்படுகிறது என்றும். இதே அளவில் அமெரிக்காவில் 5 ஆயிரம் கார்களுக்கு ஒரு மரணமே ஏற்படுகிறது என்று தெரிவிக்கிறது சமீபத்திய ஆய்வுகள்.

இந்த விபத்துகளை கருத்தில் கொண்டு அடுத்த பத்து ஆண்டுகளில் சாலை மரணங்களை 20 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா முடிவு செய்திருக்கிறது. இங்கிலாந்து 40 சதவீதத்தை இலக்காக வைத்திருக்கிறது. மலேசியா போன்ற நாடுகள் 10 ஆயிரம் வாகனங்களுக்கு 3 விபத்துக்களாக குறைப்பதில் உறுதியுடன் உள்ளன. 

ஆனால் அதிகப்படியான விபத்துக்களை நிகழ்த்தி வரும் இந்தியா இதுபற்றி இதுவரை சிந்தித்ததாக கூட தெரியவில்லை. இந்நிலையில் The Economist என்ற செய்தி நிறுவனம்.  பாதுகாப்பு, சுகாதாரம், மத கட்டுப்பாடுகள், உணவுப் பழக்க வழக்கங்கள், கல்வி, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு உலகில் மனிதர்கள் வாழத் தகுதியான நகரங்களின் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் மனிதர்கள் வாழ தகுதியான நகரங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள சுமார் 140 நகரங்களில் செய்யப்பட்ட ஆய்வின்படி. ஆஸ்திரிய நகரங்களான வியன்னா, மெல்போர்ன், சிட்னி முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன, ஜப்பானின் டோக்கியோ, ஒசாகா, கனடாவின் டொரான்டோ, டென்மாக்கின் கோபென்ஹேகென் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன. 

அடுத்ததாய் உலகில் மனிதர்கள் வாழத் தகுதியற்ற மிக மோசமான 10 மாநகரங்களின் பட்டியலில் வெனிசுலாவின் காரகஸ், அல்ஜீரியாவின் அல்ஜியர்ஸ், ஜம்பாப்வேயின் ஹராரே, பாகிஸ்தானின் கராச்சி, வங்கதேசத்தின் டாக்கா, சிரியாவின் டமாஸ்கஸ் உள்ளிட்ட நகரங்கள் இடம் பெற்றுள்ளன. 

முதல் 10 நகரங்களின் பட்டியலிலும் கடைசி 10 நகரங்களின் பட்டியலிலும் இந்திய நகரங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மணியன் கலியமூர்த்தி