மோடியிடம் பன்வாரிலால் கொடுத்த டாப் சீக்கெரட் ஃபைல்! மரண பீதியில் அமைச்சர்கள்!

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அமைச்சர்கள் சிலர் குறித்து ஆதாரங்களுடன் புகார்களை அடுக்கியதாக சொல்லப்படுகிறது.


   ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். மேகதாது அணை விவகாரம் குறித்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசுவதற்காக புரோஹித் டெல்லி செல்வதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் புரோஹித்தை சந்திக்க மோடி உடனடியாக நேரம் ஒதுக்கினார். வழக்கமாக முதல் நாள் சென்றால் மறு நாள் தான் எந்த மாநில ஆளுநராக இருந்தாலும் மோடியை சந்திக்க முடியும்.

   ஆனால் புரோஹித்துக்கு உடனடியாக மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கியதில் இருந்த இந்த சந்திப்பின் முக்கியத்துவம் தெரிந்திருக்கும். மோடியுடனான சந்திப்பின் போது டாப் சீக்ரெட் ஃபைல் ஒன்றை பன்வாரிலால் கொடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த ஓராண்டாக சென்னையில் இருந்த போது அமைச்சர்கள், அதிகாரிகள், துணை வேந்தர்கள் என உயர் பொறுப்பில் இருப்பவர்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை தான் அந்த டாப் சீக்ரெட் ஃபைல் என்கிறார்கள்.



   இதுநாள் வரை தமிழகத்தில் சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றால் கண்டுபிடிக்க முடியாத பலவற்றை தெரிந்து அதனை அறிக்கையாக தயாரித்து பன்வாரிலால் மோடியிடம் வழங்கியதாக சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு இந்த ஃபைலை பா.ஜ.க பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

   அதிலும் பா.ஜ.கவுடன் உறவை விரும்பாத அமைச்சர்கள் மற்றும் சில அதிகாரிகள் குறித்த தகவல்கள் தான் அந்த ஃபைலில் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. மாதம் தோறும் அமைச்சர்களுக்கு கிடைக்கும் கமிசன் தொகை, கான்ட்ராக்டுகளுக்கு எத்தனை பெர்சன்டெஜ் கமிசன், தொழில் அதிபர்கள் மூலமாக கிடைக்கும் மாமூல், பணிநியமனம், பணியிடமாற்றத்திற்கு கொடுக்கப்படும் தொகை என அனைத்தையும் பன்வாரிலால் புட்டு புட்டு வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

   மேலும் தினகரனுடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்த தகவல்களும் அந்த பைலில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தகவல்களை திரட்டி வருவது சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு பல நாட்களாக தெரியும். ஆனால் அந்த ஃபைல் தற்போது மோடியிடம் சென்றுள்ளது அந்த அமைச்சர்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.