முதுகுத் தோலை உரித்து அனுப்பிய கள்ளக் காதலியின் கணவன்! ஆனால் போலீஸ் மீது பழி போட்ட EB ஆஃபிசர்! மேட்டூர் திகுதிகு!

மேடூர் அருகே கள்ளக்காதலியின் கணவனிடன் சரமாறியாக உதை வாங்கிய EB ஆஃபிசர் தன்னை போலீஸ் தாக்கியதாக பொய் புகார் அளித்ததால் மின்வாரியத்தில் இருந்து அவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தி அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கொரோனாவின் கோராதாண்டவத்தினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்த்ரவு உள்ள நிலையில், மக்களின் அத்தியவாசிய தேவைகளுக்கு மட்டும் அரசு அனுமதி கொடுத்துள்ளது.  இந்த சூழ்நிலையில், மேட்டூர் அருகே கள்ளக்காதலியின் கணவனிடன் சரமாறியாக உதை வாங்கிய EB ஆஃபிசர் உண்மையினை மறைத்து சக ஊழியர்களிடம் தன்னை காவல்துறையினர் தாக்கியதாக கூறியுள்ளார்.

அதனை நம்பி பொய் புகார் அளித்ததால் மின்வாரியத்தில் இருந்து EB ஆஃபிசரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நேரு நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி இவரின் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். பழனிசாமி மேட்டூரில் மின் வாரிய ஊழியராக பணியாற்றி வருகிறார்.  மின்சாரம் அத்தியாவசிய தேவையாக இருப்பதால், ஊரடங்கின்போதும் பழனிசாமி தினம் தினம் வேலைக்கு சென்றுள்ளார். இதற்கிடையில், வழக்கம் போல் வீட்டுக்குச் சென்றவர் மாலையில் மீண்டும் அலுவலகம் சென்றுள்ளார். 

அப்போது அவர் தாக்கப்பட்ட இருந்த சூழ்நிலையை கண்ட சக ஊழியர்கள், என்னவென்று கேட்கையில், அவர் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தன்னை தாக்கியதாக கூறியுள்ளார் .

விவகாரத்தை அறிந்த சக ஊழியர்கள் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் இருந்தத ஊழியரை எப்படி காவல்துறையினர் தாக்கலாம்? என்ற கேள்வி எழுந்ததும். அப்போது பழனிசாமி ஐ.டி கார்டை எடுத்து காட்டுவதற்குள் முரட்டுத்தனமாக தடியால் அடித்ததாகக் கூறி உடம்பில் உள்ள காயங்களை சக ஊழியர்களிடம் காட்டி உள்ளார்.

கோபம் அடைந்த சக ஊழியரகள் அனைவரும் ஒன்று இணைந்து, அவர்களின் சங்கத்தின் மூலம் மின் வாரிய தலைவர் அவர்களிடம் புகாரை ஒன்றை அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில், புகார் நகல் ஒன்றை மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் சௌந்தரராஜனிடம் வழங்கினர். அதிர்ச்சி அடைந்த டிஎஸ்பி அத்தியாவசிய பணியில் ஈடுபட்டவர் மீது யார் தாக்குதல் நடத்தியது என விசாரித்துள்ளார்.

இந்த விசாரணையில், பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் , தாங்கள் யாரையும் தாக்கவில்லை என்று தெரிவித்தனர். ஆனால், புகைப்பட ஆதாரத்துடன் புகார் வந்துள்ளதே என டிஎஸ்பி கேட்க, அதிர்ந்து போன காவல்துறையினர் பழனிசாமி பணி முடிந்து வெளியே வந்த சாலை முதல் தாக்குதல் நடைபெற்றதாக புகார் அளித்த இடம் வரை உள்ள அனைத்து சி.சி.டி.வி., கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

ஆனால் அந்த பதிவில் அவர் அவ்வழியே வந்தற்கான எவ்வித பதிவுகளும் இல்லை. அதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் சக ஊழியர்கள் முன்னிலையில் பழனிசாமியிடம் விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது . அது என்னவென்றால் மின்வாரியத்தில் திருமணம் ஆனா பெண் ஒருவர் பயிற்சிக்காக அலுவலகத்திற்கு வந்துள்ளார். அவரிடம் பழகிய பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரிய வர அந்த பெண்ணை கண்டித்துள்ளார்.

கணவனின் கண்டிப்பை அடுத்து, அந்த பெண் தனது பழக்கத்தை விட்டுள்ளார்.ஆனால் பழனிசாமி அந்த பெண்ணை தொந்தரவு செய்த வண்ணம் இருந்துள்ளார். இதனை கணவனிடம் கூறியுள்ளார் அந்த பெண். இதனை அடுத்து ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர், செவ்வாய்க்கிழமை மனைவி மூலம் பழனிசாமியை வீட்டுக்கு அழைத்துள்ளார்.

செவ்வாய்கிழமை அன்று தனது வீட்டுக்குச் செல்லாமல் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார் பழனிசாமி. அங்கு தயாராக இருந்த அந்த பெண் வீட்டிற்குள் அழைத்து கதவை பூட்டியுள்ளார். வீட்டுக்குள் இருந்த இளம்பெண்ணின் கணவர், பழனிசாமியை சரமாரியாக அடிஉதை கொடுத்துள்ளார். அடி வாங்கியது பின்னர் இதனை வெளியில் சொன்னால் வெட்க கேடு என்பதால் காவல்துறையினர் அடித்ததாக கூறியுள்ளார். 

இந்த அதிர்ச்சி வாக்குமூலத்தை அறிந்த மின்வாரியம் சக ஊழியர்களிடம் பொய் சொல்லி அலைக்கழிக்க வைத்த அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில்ல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.