02.02.2000 ஜெ., ஊழல்வாதி என தீர்ப்பு! 3 மாணவிகள் எரித்து கொல்லப்பட்ட தினம் இன்று! குற்றவாளிகள் என்ன ஆனார்கள் தெரியுமா?

ஜெயலலிதா


ஜெயலலிதா ஊழல் குற்றவாளி என கோர்ட் தீர்ப்பளித்ததற்காக கோகிலவாணி,ஹேமலதா, காயத்ரி ஆகிய மூன்று வேளாண் கல்லூரி மாணவிகளை அதிமுக கிரிமினல்கள் உயிிரோடு எரித்து படுகொலை செய்த தினம் இன்று..02.02.2000

அன்றைய தினம் கோவை வேளாண் கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்ற பேருந்தின் மீது தர்மபுரி அருகே இலக்கியம்பட்டி என்னும் இடத்தில் அதிமுக கட்சியினர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர்.அக்கொடூர சம்பவத்தில் தீயில் கருகி இம்மூன்று மாணவிகள்உயிரிழந்தனர்.மேலும் பலர் காயமடைந்தனர்.

இவ்வழக்கில் நெடுஞ்செழியன்,முனியப்பன், ரவீந்திரன் ஆகிய மூன்று அதிமுக நிர்வாகிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.பின்னர் உச்சநீதிமன்றம் இதை ஆயுள் தண்டனையாக குறைத்தது.தற்போது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு என்ற பெயரில் இம்மூன்று கொலைகாரர்களையும் விடுதலை செய்துவிட்டனர்.