தி.மு.க. மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் கொரோனா காலத்திலும் சாதனை புரிந்திருக்கிறார்..!

கொரோனா பாதிப்பால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பசியும் பட்டினியுமாக தவித்துவரும் வேளையில், தன் இல்லத்திலிருந்து கொண்டே ஆசியச் சாதனை படைத்துள்ளார் திமுக சட்டமன்ற உறுப்பினரும், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளருமான மா.சுப்பிரமணியன்.


வெளியே உடற்பயிற்சி செய்ய முடியாத காரணத்தினால் தனது வீட்டின் மொட்டை மாடியிலேயே 8 போன்ற வடிவம் கொண்ட ஓடுதளத்தை உருவாக்கி, அதில் இடை நிற்காமல் 4 மணி நேரம் 8 நிமிடம் 18 நொடிகளில் 1010 முறை ஓடியுள்ளார் சுப்பிரமணியன். இவரது முயற்சி அங்கீகரிக்கப்பட்டு, ASIA BOOK OF RECORDS-ல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்கள் வீட்டு மொட்டை மாடியில் அதிக நேரம் அதாவது 4 மணி 8 நிமிடம் 18 நொடிகள்(22.2 ftHeavy multiplication x15.5 ft) எட்டு வடிவ ஓடுதளத்தில் 1010 முறை இடைநில்லாமல் (Non stop running) ஓடி,அது நேற்றைக்கு ஆசியச் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு 'ASIA BOOK OF RECORDS'ல் இடம் பெற்றுள்ளதை மகிழ்வுடன் பதிவிடுகிறேன்” என்று கூறியுள்ளார்.

கொரோனா குறித்து ஒவ்வொரு தலைவர்களும் ஏதேதோ செய்துவரும் நேரத்தில், மா.சுப்பிரமணியன் தனிமனித சாதனை புரிந்துள்ளார். இதுபோன்று அ.தி.மு.க.வினர் செய்வார்களா என்று ஸ்டாலின் சவால் விடாமல் இருந்தால் சரிதான்.