திமுக-காங்., தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி! காரணம் இந்த 2 தொகுதி தான்!

திருச்சி உள்ளிட்ட 2 தொகுதிகளை திடீரென திமுக கேட்பதால், மீண்டும் மீண்டும் காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளதாக திமுக வட்டார தகவல் வெளியாகி உள்ளது.


இதனால் தொகுதிகளை இறுதிப்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 இடங்களில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 

இழுபறி நீடித்து வரும் நிலையில் நேற்று இறுதியாக 9 தொகுதிகளை காங்கிரஸ் பட்டியலிட்டுக் கொடுக்க அதற்கு ஓரளவு சம்மதத்தை திமுக தெரிவித்ததாக கூறப்பட்டது.