இஸ்லாமியர்களுக்கு எடப்பாடியார் செய்துகொடுத்த உதவி..! எம்மதமும் சம்மதம் என்கிறார் முதல்வர்.

கொள்கைதான் அ.தி.மு.க.வுக்கு முக்கியம் கூட்டணி அல்ல என்பதை ஏற்கனவெ எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தி இருந்தார். அந்த வகையில், எம்மதமும் சம்மதம் என்ற பாணியில் அனைத்து மதத்தினருக்கும் உதவி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.


ஜெருசலேம் செல்வதற்கு மாநில அரசு வழங்கிவந்த 20 ஆயிரம் நிதியுதவியை 37 ஆயிரமாக உயர்த்திக்கொடுத்து கிறிஸ்தவர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார் முதவர் எடப்பாடி பழனிசாமி.

அந்த வகையில் இஸ்லாமியர்களுக்கும் அவர் செய்துகொடுத்த உதவி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து எடப்பாடியார் விடுத்திருக்கும் அறிவிப்பு இதோ.

நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் அமைந்துள்ள நாகூர் தர்கா குளத்தின் தடுப்புச்சுவர், சமீபத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சேதமடைந்தது. நான் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஆய்வு செய்ய சென்ற போது, இஸ்லாமிய பெருமக்கள் இத்தடுப்புச் சுவற்றினை சீரமைத்து தர கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கையினை ஏற்று, நாகூர் தர்கா குளத்தின் நான்கு புறதடுப்புச் சுவர், ரூபாய் 5.37 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசால் சீரமைத்து தரப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.