தமிழக முதல்வர் துயரச் சம்பவங்களில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிதியுதவியும் ஆழ்ந்த இரங்கலையும் வழங்கினார்..

தமிழகம் முழுவதும் எதிர்பாராத சம்பவங்களில் உயிர் இழக்கும் பல்வேறு நபர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலும் நிதியுதவியும் வழங்கியிருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


அந்த வகையில், பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’’சென்னை அசோக் நகரை சேர்ந்த சீதாராமன் மகன் ஹரிஹரன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார். இவர் உள்பட தமிழகம் முழுவதும் 15 பேர் பல்வேறு துயர சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர், என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.’’

‘’பாதிக்கப்பட்ட 15 பேருடைய குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 15 பேரில் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளார்.