தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாம்புக்கடி, மின்சார தாக்குதலில் உயிர் இழந்த 27 நபர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்குவதாக இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு இதோ.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாம்புக்கடி, மின்சார தாக்குதலில் உயிர் இழந்த 27 நபர்களின் குடும்பத்துக்கு முதல்வர் நிதியுதவி!
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், விக்கிரபாண்டியம் கிராமத்தைச் சேர்ந்த திரு. வேலாயுதம் என்பவரின் மனைவி திருமதி பானுமதி என்பவர் எதிர்பாராத விதமாக பாம்பு கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் வலங்கைமான் வட்டம், புலவர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த திரு. தெட்சிணாமூர்த்தி என்பவரின் மகன் திரு. பிரதீப் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்; கிருஷ்
ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், ஜம்புகுட்டப்பட்டி தரப்பு பழனி ஆண்டவர் நகரைச் சேர்ந்த திரு. சத்தியராஜ் என்பவரின் மகன் சிறுவன் அஜய் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்தேன்.
திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி வட்டம், நரசிங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி பர்வீன்பீவி என்பவரின் கணவர் திரு. அகமது இப்ராஹிம் ஷா என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்; மானூர் வட்டம், தேவர்குளம் கிராமத்தைச் சேர்ந்த திரு. முருகன் என்பவரின் மகன் திரு. மஞ்சுநாதன் என்பவர் எதிர்பாராத விதமாக, மின் கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; திசையன்விளை வட்டம், கரைசுத்துபுதூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. நடராஜன் என்பவரின் மகன் திரு. முத்துகண்ணன் என்பவர் மின் மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்தேன்.
திசையன்விளை வட்டம், முதுமொத்தான்மொழி கிராமத்தைச் சேர்ந்த திரு. முருகேசன் என்பவரின் மகன் பிரகாஷ் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; திசையன்விளை வட்டம், திசையன்விளை கிராமத்தைச் சேர்ந்த திரு. கந்தராஜ் என்பவரின் மகன் திரு. ராகுல் பிரசாத் என்பவர் கட்டடத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
அரியலூர் மாவட்டம் மற்றும் வட்டம், குந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. தொப்புலான் என்பவரின் மகன் திரு. சிலம்பன் என்பவர் அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராத விதமாக மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம், அகணி கிராமத்தைச் சேர்ந்த திரு. முத்துக்கண்ணு என்பவரின் மகன் திரு. கலியபெருமாள் என்பவர் விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், வரகூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி மொட்டையம்மாள் என்பவரின் மகன் திரு. ராமர் என்பவர் எதிர்பாராத விதமாக மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டம், சுரண்டை கிராமத்தைச் சேர்ந்த திருமதி பிச்சம்மாள் என்பவரின் கணவர் திரு. வேலையா என்பவர் எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
திருவேங்கடம் வட்டம், குலசேகரப்பேரி கிராமத்தைச் சேர்ந்த திரு. சமுத்திரவேல் என்பவரின் மகன் திரு. மாரிச்சாமி என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கோட்டலாம்பாக்கம் கிராமத்தில் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உடையானந்தல் கிராமத்தைச் சேர்ந்த திரு. கலியபெருமாள் என்பவரின் மகன் திரு. மணிகண்டன் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
ஸ்ரீமுஷ்ணம் வட்டம், ஏ.வல்லியம் கிராமத்தைச் சேர்ந்த திரு. நாராயணசாமி என்பவரின் மகன் திரு. வீராச்சாமி என்பவர் விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம், ஆமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. எம். பழனிக்குமார் என்பவர் மின்கம்பத்தில் பணி செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக உயிரிழந்தார் என்ற செய்தியையும்;திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு வட்டம், தொட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி அபிராமி என்பவரின் கணவர் திரு. விவீதன் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், நெலாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த திரு. சுப்பையா என்பவரின் மகன் திரு. மூர்த்தி என்பவர் மின்தடையை சரிசெய்யும் பணியின் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாடு கிராமத்தைச் சேர்ந்த திரு. சேட்டு என்பவரின் மனைவி திருமதி அஞ்சாமணி என்பவர் எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம் மற்றும் நகர் மின்பகிர்மான கழகத்தில் கம்பியாளராக பணியாற்றிய திரு. பொன்ராஜ் என்பவர் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், லிங்கவாடி கிராமத்தைச் சேர்ந்த திருமதி பஞ்சு என்பவரின் கணவர் திரு. பூசாரி என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; நிலக்கோட்டை வட்டம், பிள்ளையார்நத்தம் உள்வட்டம், கூவனூத்து கிராமத்தைச் சேர்ந்த திருமதி மகாலெட்சுமி என்பவரின் கணவர் திரு. ஜெயராஜ் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
சென்னை மாவட்டம், எழும்பூர் வட்டம், சூளைமேடு பகுதியைச் சேர்ந்த திரு. தட்சிணாமூர்த்தி என்பவரின் மகன் சிறுவன் தருணேஷ்வரன் என்பவர் மின் விசிறி இயக்க முற்பட்ட போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், தளிகைவிடுதி கிராமத்தைச் சேர்ந்த திரு. ரெங்கசாமி என்பவரின் மகன் திரு. ஆறுமுகம் என்பவர் எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
திருவள்ளூர் மாவட்டம், சிங்கிலிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த திரு. வீரப்பன் என்பவரின் மகன் திரு. அஜித் என்கிற அஜித்குமார் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், கல்புதூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி அமராவதி என்பவரின் கணவர் திரு. சண்முகம் என்பவர் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. நடேசன் என்பவரின் மகன் திரு. சேகர் என்பவர் எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
பாம்பு கடித்தும், மின்சாரம் தாக்கியும் உயிரிழந்த 27 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 27 நபர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.