அந்த ஆழ்துளை கிணறு..! முதல் முறையாக சுஜித் தாத்தா வெளியிட்ட பகீர் தகவல்!

ஆழ்துளை கிணறு கட்டப்பட்டதன் நோக்கம் குறித்து சுர்ஜித்தின் தாத்தா கூறியிருப்பது வைரலாகி வருகிறது.


கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் பேசும் பொருளாக இருந்தது 2 வயது குழந்தை சுர்ஜித். அவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிக்கி கொண்ட சம்பவம் தமிழ்நாட்டு மக்களை உலுக்கியது. அரசாங்கம் எவ்வளவோ முயன்றும், 80 மணி நேர நீண்ட போராட்டத்திற்கு பிறகு சுர்ஜித் உடல் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.

சமூக ஊடகங்கள் சில சுர்ஜித் இறந்ததற்கு, அவனுடைய பெற்றோரும் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியிருந்தன. இந்நிலையில் அவனுடைய தாயார் கல்யாணமேரி கூறியதாவது, "அந்த ஆழ்துளைக்கிணறை விவசாயத்திற்காக நாங்க கட்டவில்லை. அது சுர்ஜித்தின் தாத்தா காலத்தில் கட்டப்பட்டது. அப்போது என் கணவர் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். நாங்கள் இந்த பகுதியில் 10 வருடங்களாக வசித்து வருகிறோம்" என்று கண்ணீர் மல்க கூறினார்.

இந்நிலையில் ஆழ்துளைக்கிணறு கட்டப்பட்டது குறித்து சுர்ஜித்தின் தாத்தாவான தேவராஜ் கூறுகையில், "இந்த ஆழ்துளை கிணற்றை பற்றி என் மகளுக்கோ என் மருமகளுக்கு ஒன்றும் தெரியாது. இது என்னுடைய குடும்ப சொத்து. இந்த கிராமத்தில் மொத்தம் 3 ஆழ்துளை கிணறுகளை கட்டினேன். இவற்றை கட்டி 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

மேலும் 600 அடிக்குமேல் போர் போட்டும் தண்ணீர் வராததால் கிணறுகளை சாக்குப்பை வைத்து மூடி விட்டோம். தற்போது அதன்மீது விவசாயம் செய்து வருகிறோம். அது பள்ளமான பகுதி என்பதால் கடந்த 20 நாட்களாக பெய்த மழையினால் மீண்டும் திறந்து கொண்டது. மேலும் தண்ணீர் முழுவதும் அந்த ஆழ்துளை கிணற்றில் நிரம்பியுள்ளது" என்று அழுதுகொண்டே தேவராஜ் கூறியுள்ளார்.

இந்த செய்தியானது அந்த கிராமத்தில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.