அந்த 45 நிமிடங்கள் தான்..! தோல்விக்கு கோலி சொன்ன காரணம்! வயிற்று எரிச்சலில் ரசிகர்கள்!

ஒரு தொடர் முழுவதும் நன்றாக விளையாடிவிட்டு 45 நிமிடங்கள் செய்த சொதப்பலால் தோல்வி அடைந்துவிட்டதாக விராட் கோலி கூறியுள்ளார்.


அரையிறுதி முடிந்த பிறகு விராட் கோலி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஒரு தொடர் முழுவதும் நன்றாக விளையாடினோம். ஆனால் அரையிறுதியில் 45 நிமிடங்கள் சொதப்பிவிட்டோம். அது தான் தோல்விக்கு காரணம்.

உலக கோப்பை முழுவதும் நன்றாக விளையாடிவிட்டு 45 நிமிட தவறால் அடைந்த தோல்வியை மனம் ஏற்க மறுக்கிறது. ஆனால் இதற்கு காரணம் தவறான ஷாட் செலக்சன் தான் என்பதை ஒப்புக் கொள்கிறோம். பேட்டிங்கில் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும்.

உண்மையில் எங்களை விட நியுசிலாந்து வீரர்களை துணிச்சலை வெளிப்படுத்தினர். அவர்களின் பந்து வீச்சாளர்களின் திறமை அசாத்தியமானது. நியுசிலாந்து உண்மையில் வெற்றிக்கு தகுதியான அணி தான். 

ஜடேஜா ஆட்டம் சிறப்பாக இருந்தது. டாப் ஆர்டரில் சொதப்பிய நிலையில் தனி ஆளாக ஜடேஜா போராடினார். இருந்தாலும் நியுசிலாந்து பந்து வீச்சாளர்கள் சாதித்துவிட்டனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகள். இவ்வாறு கோலி கூறினார்.