பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக தர்ஷனை சந்தித்த ஷெரீன்..! அங்கு நிகழ்ந்த சம்பவம்!

சமிபத்தில் தனியார் தொலைக்காட்சியில் நடந்துமுடிந்த பிக் பாஸ் சீசன் 3 டைட்டிலை தர்ஷன் வெல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.


ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், இறுதிப்போட்டிக்கு கூட தகுதி பெறாமல் தர்ஷன் பிக் பாஸ் வீட்டைவிட்டு எவிக்சன் செய்யப்பட்டார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு தர்ஷன் , மக்களின் அமோக ஆதரவைப் பெற்றார் .

பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது தர்ஷன் மற்றும் ஷெரின் நெருக்கமாக பழகி வந்தனர். பிக் பாஸ் வீட்டை விட்டு தர்ஷன் வெளியேறும்போது , அதை தாங்கிக்கொள்ள முடியாமல் ஷெரின் கதறி அழுதார். மேலும் தர்ஷன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு நான் நெருக்கமாக தர்ஷனுடன் பழகியதே காரணம் என்று கூறி பிக்பாஸ் வீட்டில் ஷெரின் சோகத்தில் ஆழ்ந்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து ஷெரின் வெளியே வந்ததும் , தர்ஷன் அவரது காதலியுடன் நெருக்கமாக பழகி வருவதை உணர்ந்த ஷெரின் , தர்ஷனை நேரில் சந்திக்காமல் இருந்தார்.இந்நிலையில்  நடிகை ஷெரின் மற்றும் தர்ஷன் ஒரு ரசிகர் உடன் இணைந்து ஒரு புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர் . பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு செரின் மற்றும் தர்ஷன் இணைந்து எடுத்துள்ள இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது .