சனம் ஷெட்டியை உண்மையில் தர்ஷன் காதலிக்கிறாரா? நண்பர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

மாடலிங் துறையில் இருந்த தர்ஷன் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.


இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்க்களில் முழு உத்வேகத்துடன் செயல்பட்டதாலும் மற்றும் நியாயமாக நடந்து கொண்டதாலும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார்.

மிகச் சிறப்பாக விளையாடி கொண்டிருந்த தர்ஷன் யாரும் எதிர்பார்க்காத வகையில் இறுதிப்போட்டிக்கு தகுதி அடையாமல் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் . இதனால் ரசிகர்கள் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகினர் .

தர்ஷன் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது நடிகை சனம் ஷெட்டி , தர்ஷனை காதலிப்பது போல ஏற்கனவே எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.  தர்ஷன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு சனம் செட்டியை நேரில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது தர்ஷனுக்கு நெருக்கமான ஒருவர், தர்ஷன் யாரையும் காதலிக்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இதனால் சனம் ஷெட்டி இவ்வளவு நாட்கள் கூறியது பொய்யா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.