டெல்லி சென்று வந்த மாமனாரிடம் இருந்து மருமகளுக்கு பரவிய கொரோனா..! தஞ்சை பகீர்!

டெல்லியில் நடைபெற்ற தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய நபர் ஒருவரிடம் இருந்து அவரது மருமகளுக்கு கொரோனா பரவியுள்ளது.


தஞ்சையை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றார். பங்கேற்று திரும்பயி அவர் தஞ்சையில் உள்ள தனது வீட்டில் இருந்து வந்தார். அவரது மகன் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் மனைவி மற்றும் மருமகளுடன் அவர் இருந்துள்ளார்.

இந்த நிலையில் தப்லீக் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களை கண்டுபிடித்து அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்தனர். அப்போது அந்த நபருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவரை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து அதிகாரிகள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே முன் எச்சரிக்கையாக கொரோனா பாதித்த நபரின் வீட்டில் இருந்த மனைவி மற்றும் மருமகளுக்கும் சோதனை நடத்தப்பட்டது. இதில் மருமகளுக்கு கொரோனா தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் அனுமதிகிகப்பட்டுள்ளார்.