டிடிவிக்கு பகிரங்க மிரட்டல்! ஆபாச அர்ச்சனை! தங்க தமிழ்செல்வன் ஆடியோ வைரல்! வெடித்தது மோதல்!

டிடிவி தினகரனுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்து தங்க தமிழ்செல்வன் பேசிய ஆடியோ வைரல் ஆகி வருகிறது.


நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு தங்கதமிழ்செல்வன் – டிடிவி தினகரன் இடையிலான உறவு பாதிக்கப்பட்டது. அண்மையில் திருச்சியில் தினகரன் நடத்திய கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் தங்கதமிழ்செல்வன் பங்கேற்கவில்லை. மேலும் எடப்பாடி பழனிசாமியை அண்ணன் என்று கூறி டிடிவி தரப்பை அதிர வைத்திருந்தார் தங்கதமிழ்செல்வன்.

இந்த நிலையில் தேனியில் அமமுக நிர்வாகிகள் கூட்டத்திற்கு அதிரடியாக ஏற்பாடு செய்துள்ளார் டிடிவி தினகரன். தேனி மாவட்டத்தை சேர்ந்த தங்கதமிழ்செல்வனிடம் சொல்லமலேயே இந்த கூட்டத்தை டிடிவி ஏற்பாடு செய்துள்ளார்.

இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்றுள்ள தங்கதமிழ்செல்வன் டிடிவியின் உதவியாளர்களில் ஒருவரான பிரபுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு லெப்ட் அன்ட் ரைட் வாங்கியுள்ளார். உங்கள் அண்ணனை இது போன்ற அரசியல் எல்லாம் செய்ய வேண்டாம் என்று கூறி வை என்று தங்க தமிழ் செல்வன் அதில் பேசுகிறார்.

மேலும் தேனியிலடா கூட்டம் போடுறிங்க நான் மதுரையில கூட்டத்தை போடுறேன்டா உங்க அண்ணன முடிஞ்சதை செய்ய சொல்லுங்டா என்று கோபமாக பேசும் தங்கதமிழ் செல்வன் உங்கள் அண்ணன் அரசியலில் என்றும் ஜெயிக்க முடியாது என்று காட்டமாக கூறுகிறார்.

மேலும் அவ்வப்போது ஆபாச வார்த்தைகளிலும் தங்கதமிழ்செல்வன் டிடிவி தரப்பை அர்ச்சிக்கிறார். இந்த செல்போன் உரையாடல் ஆடியோ தற்போது வாட்ஸ் ஆப்பில் வைரல் ஆக பரவி வருகிறது.  நான் வாயை திறந்தால் நீங்கள் எல்லாம் இருக்கவே மாட்டீர்கள் என்றும் அதில் தினகரனை எச்சரிக்கிறார் தங்க தமிழ்செல்வன். 

தினகரன் கோழைத்தனமாக அரசியல் செய்கிறார்.கோழைத்தனமாக அரசியல் செய்தால் டிடிவி தினகரன் அழிந்து போவார் என்று முடித்துள்ளார். தற்போது தினகரன் - தங்கதமிழ்செல்வன் மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது. https://www.youtube.com/watch?v=MKGTgPe6rII