தமிழச்சி மேக்கப்புக்கு மட்டும் ரெண்டே கால் மணி நேரம்! கால் கடுக்க காத்திருந்து டென்ஷனாகும் திமுக தலைகள்!

தினமும் மேக்கப்புக்கு மட்டும் இரண்டரை மணி நேரம் திமுக தலைகளை காக்க வைப்பதால் தமிழச்சி மீது கடும் எரிச்சலில் உள்ளார்களாம் உடன்பிறப்புகள்


தினமும் காலை 7 மணிக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் அனைத்துக் கட்சிகளின் ஸ்டைல். ஏனென்றால் அப்போதுதான் பகல் 11 மணி வரை ஒரு ரவுண்ட் போய்விட்டு, அதன்பிறகு கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொண்டு மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை சுற்ற முடியும்.

ஆனால், தமிழச்சிக்கு மேக்கப் போட தனியே ரெண்டு மணி நேரம் ஆவதால், அந்த நேரத்தை தேர்தல் கமிஷனிடம் கூடுதலாக கேட்க முடியுமா என்று யோசித்து வருகிறார்கள். காலையில் மட்டும் 7 மணிக்கு தயாராகிவிடுகிறார் தமிழச்சி.

அதன்பிறகு ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு முறை 15 நிமிடங்கள் மேக்கப் டச் செய்கிறாராம்.  10 மணிக்கு மேல் பிரசாரம் செய்வதற்கு அம்மணி தயாராக இல்லை. வெயில் பட்டா ஒத்துக்காது என்று ஒதுங்குகிறார்.

அதன்பிறகு மாலையிலும் இதே பஞ்சாயத்து. சீரியஸாக பிரசாரம் போய்க்கொண்டிருக்கும் போது சட்டென்று காருக்குள் ஒதுங்கி மேக்கப் போட்டு, புது பூ வைத்து வரும் வரையிலும் காத்திருக்க வேண்டியிருக்கிறது என்று கட்சிக்காரர்கள் டென்ஷாகிறார்கள்.

இது போதாது என்று பத்திரிகையாளர்கள், மீடியாக்கள், போட்டோகிராபர்கள் வந்துவிட்டால், பேசுவதாக இருந்தால்கூட மேக்கப் போட்டுக்கொண்டுதான் வருகிறார். முடியல என்று புலம்புகிறார்கள் கட்சிக்காரர்கள்.
ஏம்மா... அழகான வேட்பாளர்ன்னு சொன்னதுக்காக இப்படியாம்மா படுத்துறது..?