தளபதி 64! 2020 சம்மர் ரிலீஸ்! தெறி அறிவிப்பு!

தளபதி 64 அடுத்த ஆண்டு சம்மர் வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளது.


பிகில் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. தளபதி 64 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.

மாநகரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து உள்ளார். பெரிய இயக்குனர்களை மட்டுமே நம்பி பல ஆண்டுகளாக நடித்து வந்த விஜய் முதல்முறையாக இளம் இயக்குனர் ஒருவருடன் மிக சமீப காலத்தில் உள்ளார்.

ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்துடன் தளபதி 64 உருவாக உள்ளது. பிகில் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே தளபதி 64 அறிவிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.