தைப்பூசம் என்பது தமிழர்களின் முக்கிய ஆன்மிகத் திருவிழாவாக இருந்த போதும், அதனை கொண்டாட முடியாமல் மக்கள் தவித்துவந்தனர். ஏனென்றால், வேலை நாட்களில் விடுப்பு போட்டுத்தான் கோயிலுக்குச் செல்ல நேரிடும். விடுப்பு வாங்குவதிலும் சிக்கல் வரும்.
தமிழகம் முழுவதும் தைப்பூசம் கொண்டாட்டம் கோலாகலம்... எடப்பாடிக்கு மக்கள் வாழ்த்து.
இந்த பிரச்னைகளுக்குத்தான் தீர்வு கொடுப்பது போன்று தைப்பூசத்தை விடுமுறை தினமாக அறிவித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அப்படி அறிவிப்பு வெளியிடப்பட்ட முதல் ஆண்டு தைப்பூசம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பார்கள் தைப்பூசம், ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது.
அதன்படி, இந்த விழா முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, திருத்தணிகை, பழமுதிர் சோலை மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும்,கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச விழாவை ஒட்டி முருக பக்தர்கள் பலரும் விரதம் இருந்து பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட கோயில்களுக்கு பாத யாத்திரையாக சென்று முருகப்பெருமனை தரிசித்தனர். தைப்பூச திருவிழாவையொட்டி வடலூர் சத்திய ஞானசபையில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தைப்பூச திருநாளை அரசு விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதுகுறித்து பேசும் மக்கள், ‘தைப்பூசத்தன்று நிம்மதியாக குடும்பத்தினருடன் சென்று முருகனை வழிபட வழி வகுத்துவிட்டார் முதல்வர் எடப்பாடி’ என்று சந்தோஷப்படுகிறார்கள்.