தாய்ப்பால் கெட்டுப்போகுமா?

குழந்தைக்கு நீண்ட நேரம் தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால், பாலில் புளிப்பு சுவை வந்துவிடும் என்றும், அதன்பிறகு பால் குடிக்கும் குழந்தையின் வயிறு கெட்டுவிடும் என்றும் ஒரு கருத்து கிராமப்புறங்களில் இன்றும் நிலவுகிறது. இது உண்மையில்லை என்பதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


·         பொதுவாக மார்பகத்தில் பால் சேமித்து வைக்கப்படுவதில்லை. பால் நாளங்களிலும் மிகவும் குறைந்த அளவே பால் தேங்கியிருக்கும் என்பதால், எப்போதும் தாய்ப்பால் கெட்டுப்போவதில்லை.

·         அதேபோல், தாய் முட்டை சாப்பிட்டால் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு உண்டாகும், ஜூஸ் குடித்தால் குழந்தைக்கு சளி பிடிக்கும் என்ற கருத்துக்களிலும் உண்மை இல்லை.

·         நிறைய உணவு எடுத்துக்கொண்டால் நிறைய பால் சுரக்கும் என்பதிலும் உண்மை இல்லை. எதுவுமே சாப்பிடவில்லை என்றாலும் குழந்தைக்காக பால் சுரக்கவே செய்யும். 

·         ஏதாவது மருந்து சாப்பிட்டுவந்தால் மட்டும், மருத்துவர் ஆலோசனையை கேட்டபிறகே தாய்ப்பால் கொடுக்கவேண்டும்.

குளிர் காலம், வெயில் காலம் போன்ற கால மாறுதல் அல்லது தாயின் உடல்நிலை மாறுதல் போன்றவற்றாலும் தாய்ப்பால் கெட்டுப்போவதில்லை. அதனால் ஆறு மாதங்கள் வரையாவது கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்கவேண்டும்.