மாடல் 3 காரை ஹேக் செய்து ஓட்டிச் செல்பவர்களுக்கு 7 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது.
நம்பினால் நம்புங்கள்! இந்த காரை ஓட்டிச் சென்றால் ரூ.7 கோடி பரிசு!
மின்சார கார்கள்
உற்பத்தியில் உலகம் முழுவதும் கோலோச்சி வரும் நிறுவனம் டெஸ்லா. உலக கார்
சந்தைகளில் இந்த நிறுவனத்தின் கார்களுக்கு முக்கிய இடம் உண்டு. இந்த நிறுவனமானது
அடுத்து அறிமுகம் செய்யவுள்ள கார் மாடல் 3. அதிக திறன் அதிநவீன பாதுகாப்பு
அம்சங்களுடன் இந்திய ரூபாய் மதிப்பின் படி 48 லட்சம் ரூபாய் விலைக்கு இந்த கார்
விற்பனைக்கு வர உள்ளது.
தனது தயாரிப்பில்
சமரசம் செய்து கொள்ளாத டெஸ்லா நிறுவனம், தங்களுடைய தயாரிப்பின் குறைபாடுகளை
சுட்டிக் காட்டுவதற்காக ஒரு வினோதமான போட்டியை வைத்துள்ளது. போட்டி என்னவென்றால்
காரின் மென்பொருள் தொழில்நுட்பத்தை ஹேக் செய்ய வேண்டும் மற்றும் குறைகளை
சுட்டிக்காட்ட வேண்டும் என்பதாகும்.
இதன்படி காரின் பாதுகாப்பு அம்சங்களுக்கான மென்பொருள் தொழில்நுட்பத்தை ஹேக் செய்பவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது இந்திய மதிப்பின்படி 7 கோடியே 10 லட்சம் ரூபாய் ஆகும். ஒருவேளை ஹேக் செய்துவிட்டால் அதன்மூலம் பாதுகாப்பு அம்சங்களை மேலும் ஒரு படி உயர்த்திக்கள்ளவும் மேம்படுத்துவும் யோசனை உண்டாகும் என்கிற அடிப்படையில் இந்த போட்டி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் காரில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டினால் மாடல் 3 கார் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் காரின் பாதுகாப்பு மென்பொருளை ஹேக் செய்பவரின் பெயர் டெஸ்லா நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவிடப்பட்டு அவர்களுக்கு புகழாரம் சூட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மாடல் 3 காரை ஹேக் செய்து ஓட்டிச் செல்பவருக்கு ரூபாய் 7 கோடி பரிசு என்று சொல்லியுள்ளது டெஸ்லா. உண்மையில் நீங்கள் திறமையான கம்ப்யூட்டர் வல்லுனர் மற்றும் கார் ஓட்டத் தெரிந்தவர் என்றால் முயற்சித்து பார்க்கலாம்.