எனக்கு வயசாயிடுச்சி..! நாட்டுக்காக என் மகளை அனுப்புகிறேன்..! வீர மரணம் அடைந்த ராணுவ அதிகாரி மனைவியின் நெஞ்சுரம்..!

தீவிரவாதிகளுடன் நடைபெற்ற தாக்குதலில் ராணுவ உயர் அதிகாரி உயிரிழந்துள்ள சம்பவமானது இராணுவத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வடக்கு எல்லை குப்வாரா மாவட்டம். இதற்குட்பட்ட ஹன்ட்வாரா என்று இடத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக அழைத்து செல்வதாக ரகசிய தகவல் ராணுவத்தினருக்கு கிடைத்தது. முடியாதவர்கள் ஒரு குழு அமைத்து குறிப்பிடப்பட்ட பகுதிக்கு மே-3 ஆம் தேதி சென்றனர்.

அன்று மாலை நேரத்தில் அப்பகுதியில் கடுமையான மழை பெய்ததால் இராணுவத்தினர் தேடுதல் பணியில் ஈடுபட இயலவில்லை. மறுநாள் காலையில் விரைவாக தேடுதல் பணியை தொடங்கிய வீரர்கள், தீவிரவாதிகளின் இருப்பிடத்தை சுற்றிவளைத்தனர். பின்னர் அவர்கள் மீது தாக்குதலை தொடங்கினர். இரு பிரிவினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்றது.

அப்போது ராணுவ மேஜர், கர்னல் பதவி வகித்து வந்த அஷுதோஷ் ஷர்மா மற்றும் ஒரு காவல்துறை அதிகாரி ஆகியோர் உயிரிழந்தனர். இந்த சண்டையில் இரு தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். மறுநாள் இறந்த ராணுவ அதிகாரியின் உடல்கள் மீட்கப்பட்டன. பிணைய கைதிகளாக கடத்தப்பட்டிருந்த குடும்பத்தினரையும் ராணுவத்தினர் மீட்டெடுத்தனர்.

தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். கர்ணல் அஷுதோஷ் ஷர்மா 2 முறை கேளன்ட்ரி விருது பெற்றவர். 21 குண்டுகள் முழங்க அவருடைய உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 21 ராஷ்டிரிய ரைஃபிள் பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். அவருடைய இறப்பு குறித்து மனைவி கூறுகையில், "அவர் 13 ஆண்டுகள் மிகவும் சிரமப்பட்டு பின்னர் இராணுவத்தில் இணைந்தார். எங்களுக்கு 11 வயதில் தமன்னா என்ற மகளுள்ளார். கடந்த இரு நாட்களாக அவளை சுற்றி நடக்கும் சம்பவங்களை கூர்ந்து கவனித்து வருகிறாள். ஆனால் ராணுவத்தில் சேர வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் விருப்பம். மனிதநேயமிக்க பெண்ணாகவும் நாட்டுப்பற்று மிக்க பெண்ணாகவும் அவளை வளர்க்க வேண்டியது தலையாய கடமையாகும்" என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது ஹண்ட்வாரா அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.