சமூக நலக்குழுக்கள் அதிகமாக உள்ள மாநிலங்களில் ஒன்றாக குஜராத் மாநிலம் விளங்குகிறது.
ஒரு மாநிலத்தையே மிரட்டிய கேங்ஸ்டர்! பொறி வைத்து பிடித்த 4 பெண் ஏடிஎஸ் அதிகாரிகள்!

இந்த மாநிலத்தில் தீவிரவாத எதிர்ப்பு குழுக்கள் பல உள்ளன. அவற்றுள் ஒரு குழுவின் பெண்கள் அணி பிரமிக்கத்தக்க செயலை செய்துள்ளனர். அங்கு நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளியை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.குஜராத்தில் கொலை, கொள்ளை கற்பழிப்பு,போலீசாரை சுட்டது உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவன் ஜுசப் அலஹ்ரகா சந்த்((Jusab Allahrakha Sandh)) என்பவன்.
இவன் கடந்த ஓராண்டாக போலீசாருக்கு பயந்து தலைமறைவாக இருந்துள்ளான். ஒரு சில வாரங்களுக்கு முன்பு, இவன் பதுங்கி இருக்கும் இடம் தெரிந்தது. அவனை உயிருடன் பிடிக்க அந்த மாநிலத்தின் தீவிரவாதி எதிர்ப்பு பெண் குழுவிற்கு உத்தரவிடப்பட்டது.குஜராத் மாநிலத்தில் உள்ள பொடத் (botad) மாவட்டத்தில் தேவ்தாரி என்னும் வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாயின.
AK-47 ரக துப்பாக்கி உடன் சென்ற 4 பெண்கள் கொண்ட குழுவினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.இதனையடுத்து அடர்ந்த வனப்பகுதியில் மறைந்திருந்த ஜுசப் அலஹ்ரகாரை அவர்கள் கைது செய்து சிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.