காதலி முன் காதலன் சுட்டுக் கொலை! காட்டுக்குள் பதுங்கியவனை ஹெலிகேம் மூலம் தூக்கிய போலீஸ்!

ஒகேனக்கல் அருவி தென்தமிழகத்தில் காவிரி ஆற்றின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் மே தினத்தன்று இளைஞர் ஒருவர் சுட்டுக்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


முனுசாமி என்பவர் ஒகேனக்கல் அருவிக்கு அருகிலுள்ள ஜருகு என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தன் உறவுக்கார பெண்ணும் காதலியுமான ஒருவருடன் வனப்பகுதிக்கு சென்றுள்ளார். தனிமையில் இருவர் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது காதலி முன்பு காதலனை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பினான். இந்த செய்தி மிகவும் வைரலாக  பரவி வந்த நிலையில், கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க தமிழக காவல்துறை 7 தனிப்படைகள் அமைத்தனர்.

இந்த தனிப்படையினர் ஆறு நாட்களாக தேடுதல் பணியை மேற்கொண்டனர்.  ஹெலிகேம் ஒன்றை பறக்கவிட்டு ஒகேனக்கல் வனப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த நிலையில்  கொலையில் தொடர்புள்ளதாக செல்வம் என்பவன் வனத்தில் பதுங்கியிருந்ததை ஹெலிகேம் காட்டிக் கொடுத்தது.

இதனை அடுத்து அந்த செல்வம் என்பவர் பென்னாகரம் அடுத்த ஏரியூர் சிகரலஅள்ளி வனப்பகுதிக்குள் தப்ப முயன்ற போது போலீசார் கைது செய்தனர். முனுசாமி கொலை தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. காவல்துறையின் இந்த துணிகர செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். கொலைக்கான காரணம் விரைவில் தெரியவரும்.