நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா மரணம்..! விமான நிலையமே பிணவறையாக மாறும் அதிர்ச்சி சம்பவம்!

அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கையினால் பர்மிங்ஹாம் விமான நிலையத்தில் தற்காலிக பிணவறை உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 29,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 6,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்தியா, இத்தாலி, பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகள் இந்த வைரஸ் தாக்குதலை எதிர்த்து தீவிரமாக போராடி வருகின்றன. பிரிட்டன் நாட்டின் இந்த வைரஸ் தாக்குதலின் வேகம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் நோய்த்தாக்கம் அசுரவேகத்தில் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் நோயாளி நோயறிதலுக்காக கிட்டத்தட்ட 5 மக்கள் வரை காத்து இருக்கக்கூடிய அவலம் அந்த பகுதியில் ஏற்பட்டுள்ளது. நேற்று பிரிட்டன் நாட்டில் பதிவான இறப்பு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 156 பேர் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. 

இதனால் அந்நாட்டின் அதிகாரிகள் பர்மிங்ஹாம் விமான நிலையத்தில் தற்காலிகமாக பிணவறை ஒன்றை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளனர். கிட்டத்தட்ட 12,000 பிணங்கள் வரை சேமித்து பாதுகாக்க இயலும் என்று உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வைரஸ் தாக்குதலினால் இறந்துபோகும் 5 பேரில் ஒருவர் இந்த பகுதியை சேர்ந்தவராக இருக்கின்றனர் என்று அந்நாட்டின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்த செய்தியானது பர்மிங்ஹாம் உலகம் முழுவதிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.