பிரபல டிவி நடிகை திடீர் மரணம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..! பதற வைக்கும் காரணம்! யார் தெரியுமா?

தெலுங்கு தொலைக்காட்சி நடிகையும், ராஜீவ் கனகலாவின் சகோதரியுமான ஸ்ரீலட்சுமி கனகலா புற்றுநோயால் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பாக ஹைதராபாத்தில் காலமானார்.


தெலுங்கு தொலைக்காட்சி நடிகை ஸ்ரீலட்சுமி கனகலா கடந்த சில காலமாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். புற்றுநோயுடன் போராடி கொண்டிருந்த அவர் சில மணி நேரத்திற்கு முன்பாக ஹைதராபாத்தில் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஸ்ரீலட்சுமி பிரபல நடிகர் ராஜீவ் கனகலாவின் சகோதரி ஆவார்.

இவர் தனது தந்தை மற்றும் பிரபல நடிகர் தேவதாஸ் கனகலாவின் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ராஜசேகர சரித்ராவுடன் நடிப்பில் அறிமுகமானார். பின்னர் ரூத்து கீதம் , சூப்பர் அம்மா, அக்னிபூலு போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்த நடிகையாக மாறினார் ஸ்ரீலட்சுமி. இந்த நடிகையின் மறைவிற்கு திரைத்துறையினர் சேர்ந்த பல பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அம்ருத்தம் நடிகர் ஹர்ஷா வர்தன் பேஸ்புக்கில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து கொண்டார், அங்கு அவர் ஸ்ரீலட்சுமியின் மறைவு குறித்து மிக உருக்கமாக பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவரது ரசிகர்கள் சிலர், ராம ராகரு மற்றும் ராஜீவ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவருடைய பரிசுத்த ஆத்மா அமைதியுடன் சாந்தம் ஆகட்டும் எனவும் ஒருவர் பதிவிட்டிருந்தார்.

நடிகை ஸ்ரீலட்சுமியின் மறைவு தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.