படப்பிடிப்பில் மாரடைப்பு! மயங்கி விழுந்த பிரபல டிவி நடிகை கவலைக்கிடம்!

பிரபல தொலைக்காட்சி நடிகை கெஹானா வசிஸ்த் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தொலைக்காட்சி நடிகை கெஹானா வசிஸ்த் வெப் சீரிஸில் பிஸியாக நடித்து வந்தார். இப்படி நடத்தி வரும் போது கடந்த வியாழக்கிழமையன்று திடீரென்று படப்பிடிப்பு தளத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிக் கீழே விழுந்தார்.

நடிகை வசீஸ்ட் வேலை நிமித்தமாக நீண்ட நேரமாக உணவு உட்கொள்ளாமல் நடித்து வந்திருக்கிறார் . இதனைத்தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு மும்பையில் உள்ள ரக்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தற்போது நடிகை வசிஸ்த், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். நடிகையின் உடல்நிலையை குறித்து மருத்துவர்களிடம் கேட்டபொழுது, மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளுக்கும், அன்றைய தினம் நடிகை வசிஸ்த் உட்கொண்ட சில ஆற்றல் பானங்களுக்கும் இடையில் ஏற்பட்ட எதிர்விளைவு காரணமாக இவ்வாறாக நடந்திருக்கலாம் என்று அவர்கள் சந்தேகிக்கிறார்கள்.

மேலும் பேசிய மருத்துவர்கள் நடிகை வசிஸ்த் அன்றைய தினம் சரியான உணவு உட்கொள்ளாமல் தொடர்ந்து 48 மணி நேரத்திற்கு மேலாக வேலை செய்ததன் விளைவு தான் அவரை இந்த அளவுக்கு மோசமான நிலைக்கு தள்ளி உள்ளது என்று கூறினார். 

நடிகை வசிஸ்த்-ன் உடல்நிலை பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது . மேலும் இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.