பெண்களை தவறான நோக்கத்தில் தொட்டால் கரண்ட் அடிக்கும்! மாணவர்கள் கண்டுபிடித்த ஸ்மார்ட் வளையல்!

பெண்களை அத்துமீறி தொடும்போது ஷாக் அடிப்பது போன்ற ஸ்மார்ட் வளையல்களை தெலங்கானா மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.


தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் பகுதியில் சாய் தேஜா மற்றும் காடி ஹரிஷ் ஆகிய 2 இளைஞர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பெண்களை ஆபத்திலிருந்து பாதுகாப்பதற்காக ஸ்மார்ட் வளையல் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது பெண்களை யாரேனும் அத்துமீறி தொட்டால், பட்டவர்களின் உடல்நிலை எலக்ட்ரிக் ஷாக் அடிக்கும். அதேசமயம் அந்தப் பெண் இருக்கும் இடம் அவருடைய பெற்றோர் மற்றும் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்படும். இதன் மூலம் ஆபத்தான நிலையிலிருந்து பெண்கள் தங்களை காப்பாற்றி கொள்ள இயலும். 

இந்த கண்டுபிடிப்பானது பல பெண்களிடம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. அனைத்து சோதனைகளிலும் இந்த வளையல் சரியான முறையிலேயே செயல்பட்டுள்ளது.

வெகுவிரைவிலேயே இந்த ஸ்மார்ட் வகைகள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஸ்மார்ட் வலையளை பற்றி சோதித்த பெண்கள் நன்றாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த ஸ்மார்ட் வளையலை கண்டுபிடித்த 2 மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.