சிறுவனின் வாயில் பணத்தை கத்தை கத்தையாக திணித்த ஆளும் கட்சி எம்எல்ஏ! அதிர வைக்கும் காரணம்!

தெலுங்கானா மாநிலத்தில் வாத்தியக் கருவியை சிறப்பாக வாசித்த சிறுவனின் வாயில் பணத்தை திணித்த துணை சபாநாயகர் பத்மா ராவ் கவுடின் செயலுக்கு குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


ஒரு திருவிழா நிகழ்ச்சியின்போது வாத்தியக் கருவியை சிறப்பாக வாசித்த சிறுவனை பாராட்டும் வகையில் அவனது வாயில் பத்மராவ் பணத்தை திணித்தார். அதை வாயில் வைத்துக் கொண்டே அதன்பிறகும் சிறுவன் அந்த வாத்தியக் கருவியை வாசித்த காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளன.

இது பரவலாக குழந்தைகள் உரிமை ஆர்வலர்களின் கண்டனத்தை பெற்றுள்ளது. ஒரு பொறுப்புள்ள பதவியிலுள்ள பத்மா ராவ் சிறுவன் வாசித்து முடிக்கும் வரை காத்திருந்து அதன் பிறகு அவன் கையிலோ அல்லது சட்டைப் பையிலோ அந்த பணத்தை வைத்து இருந்தால் அது சிறுவனின் கண்ணியத்தையும் மரியாதையையும் காக்கும் வகையில் இருந்திருக்கும் என்றும் பத்மா ராவ்  நடந்து கொண்ட விதம் சிறுவனை அவமதிக்கும் வகையில் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் 

இது தெலுங்கானாவில் வழக்கத்தில் உள்ள ஒரு பழக்க வழக்கம் இன்றும் இசைக் கலைஞர்களை இந்த வகையில் கௌரவிப்பதை  அங்குள்ள மக்கள் வழக்கத்தில் கொண்டிருப்பதாகவும் அதனையே தான் பின்பற்றியதாகவும் இதில் தவறு ஏதும் இருப்பதாக நான் கருதவில்லை என்றும் பத்மா ராவ் தெரிவித்துள்ளார்