மூச்சுவிட சிரமப்பட்டு வந்த நபரின் மூக்கில் பல் இருந்த சம்பவமானது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூக்கின் வழியாக முளைத்த பற்கள்..! மூச்சு விட முடியாமல் ஹாஸ்பிடல் சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி! எக்ஸ்ரே பார்த்து மிரண்ட டாக்டர்கள்!
சீனா நாட்டின் வடக்கில் ஹார்பின் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு சாங் பின்ஷென்ங் என்ற 30 வயது நபர் வசித்து வருகிறார். கடந்த 3 மாதங்களாக மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு வந்துள்ளார். சில நேரங்களில் வாசனைகளை கூட அவரால் முகர இயலவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ஹார்பின் மெடிக்கல் யுனிவர்சிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அங்கு முதலில் அவருடைய மூக்கு பகுதியில் எக்ஸ்ரே எடுத்துப்பார்த்த மருத்துவர்கள் மனித பல் போன்று ஏதேனும் இருப்பதாக உணர்ந்துள்ளனர்.
உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே பல்லை வெளியே எடுக்க முடியும் என்பதை மருத்துவர்கள் அவரிடம் கூறியுள்ளனர். சம்மதம் தெரிவித்தவுடன், சில நாட்களுக்கு முன்னர் 30 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சையின் முடிவில் அந்த பல்லை மருத்துவர்கள் பத்திரமாக வெளியே எடுத்துள்ளனர்.
சிகிச்சை முடிந்த பின்னர் அந்த இளைஞர் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதால் மருத்துவமனையிலேயே தங்கியிருப்பதாகவும் கூறியுள்ளனர்.
1999-ஆம் ஆண்டில் இவர் மால் ஒன்றின் மூன்றாவது தளத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். அப்போது அவருடைய முகத்தில் 65 தையல்கள் போடப்பட்டன. அவருடைய வாயிலிருந்து 2 பற்கள் காணாமல் போயுள்ளன. ஒன்றை மட்டுமே பெற்றோர் கண்டுபிடித்து இருந்த நிலையில், மற்றொன்று அவருடைய மூக்கினுள் இருப்பதை கண்டறியாமல் இருந்துள்ளனர்.
இந்த சம்பவமானது சீனா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.