நம்பி வந்த காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்! சேலம் பரபரப்பு!

சேலத்தில் இளம் பெண் ஒருவரை காதலன் உள்ளிட்ட மூன்று பேர் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலத்தில் புதிய பஸ்நிலையம்  அருகில் ஒரு ஜவுளி கடை அமைந்துள்ளது. இங்கு 17 வயது பெண் ஒருவர் வேலை பார்த்து வந்தார்.  வழக்கம் போல கடந்த 10-ம் தேதி காலை இவர் வேலைக்கு சென்றார். ஆனால் அன்றிரவு இவர் வீடு திரும்பவில்லை. பல மணிநேரம் கடந்தும் அந்தப் பெண் வீட்டிற்கு வராததால் பெற்றோர் பதற்றமடைந்தனர். பின்னர் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.

இதன் நடுவில், காணாமல் போன அந்த சிறுமி மீண்டும் அதே ஜவுளிக்கடைக்கு வேலைப்பார்க்க வந்ததாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் பெண்ணின் பெற்றோரை அழைத்து கொண்டு அந்த ஜவுளிக்கடைக்கு சென்றனர். அங்கிருந்து அந்த பெண்னை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் தன்னை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக அந்த பெண் கூறியுள்ளார். அதாவது, அந்த பெண் வேலைக்கு சென்ற போது, மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் அவளை துரத்தி வந்துள்ளனர். அவர்கள், தங்கள் பெண்ணிடம், உனது பெற்றோர் விபத்தில் சிக்கி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.  பதற்றத்தில் அவளும் அவர்களுடன் சென்றாள்.

அப்போது, கைக்குட்டையில் மயக்க மருந்தை தடவி அவளது முகத்தில் வைத்து அமுக்கியுள்ளனர். மயக்க மருந்து  ½ மணி நேரம் வேலை செய்துள்ளது. பின்னர் அந்த 3 பேரும் அந்த பெண்னை ஒரு வீட்டிற்கு சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் புகாரளித்தனர். மேலும் அந்த மூவருக்கும் உரிய தண்டனை பெற்றுத் தருமாறு காவல்துறையினரிடம் மன்றாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே கடத்தல் என்பது பொய் புகார் என்றும் அந்த பெண் தனது காதலனுடன் சென்ற நிலையில் அவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து பெண்ணை சீரழித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து அந்த பெண்ணிடம் காதலன் யார், உடன் இருந்தவர்கள் யார் என்பது பற்றி விசாரணை நடைபெறுகிறது.