கோவையில் 2 ஆண்களுடன் ஒரே பைக்கில் பயணம் செய்த முஸ்லீம் பெண்! புர்காவுடன் சென்றதால் நேர்ந்த விபரீதம்!

வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை தடுத்து நிறுத்தி மிரட்டிய சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவமானது கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டத்தில் குனியமுத்தூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன் 2 ஆண் நண்பர்களுடன் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மற்றொரு வாகனத்தில் வந்த சமியுள்ளா, இப்ராஹிம் ஆகிய இரண்டு இளைஞர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மேலும் ஒரே வாகனத்தில் இரண்டு ஆண்களுடன் பயணித்தற்காக பெண்ணை கடுமையாக கண்டித்துள்ளனர். அந்த பெண்ணின் வீட்டு விலாசத்தை பெற்றனர். பெண்னின் வீட்டிற்கு சென்று அவள் பெற்றோரிடம் பெண் நடந்து கொண்ட விதத்தைப்பற்றி புகாரளித்துள்ளனர். 

அதே பகுதியில் உலாவி வந்த இருவர், அந்த 2 ஆண்கள் பெண் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன், முகத்தைப் மூடி ஒரு கடையில் அடைத்து துன்புறுத்தியுள்ளனர். "எங்கள் சமுதாய பெண்ணுடன் எவ்வாறு ஒன்றாக செல்லலாம். அவர்களை காதலிக்க முயற்சிக்கிரீர்களா" என்று கூறி சரமாரியாக அடித்துள்ளனர். பின்னர் எச்சரித்து இருவரையும் விடுவித்துள்ளனர்.

சம்பவமறிந்த பாதிக்கப்பட்ட பெண் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சமியுள்ளா மற்றும் இப்ராஹிம் ஆகிய இருவர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்த சம்பவமானது குனியமுத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது