செயற்கை கருவூட்டல் முறையில் பிறந்த பெண்! தந்தை யாரென கண்டுபிடிக்க எடுத்த முயற்சி! இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி!

16 ஆண்டுகளுக்கு பிறகு தனக்கு உயிரணுவை தானம் செய்த நபரை பெண் கண்டுபிடித்து இருப்பது அமெரிக்காவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


டெக்ஸாஸ் நகரை சேர்ந்தவர் மார்கோ வில்லியம்ஸ். இவருடைய கணவரால் இவருக்கு ஒரு குழந்தையை பெற்றுத்தர இயலாது என்பதை அறிந்து மிகவும் மனமுடைந்தார். பின்னர் தனக்கு செயற்கை முறையில் குழந்தை வேண்டுமென்று மருத்துவரிடம் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் செயற்கை உயிரணு வண்டியின் மூலம் வில்லியம்ஸிற்கு அவருடைய மருத்துவ உயிரணுவை ஏற்பாடு செய்தார். அதன் மூலம் மார்கோ வில்லியம்ஸ் ஈவ் வில்லி என்ற அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

தற்போது அமெரிக்கா நாட்டில் மரபணு பரிசோதனை செய்துகொள்வது வழக்கமாகிவிட்டது. இதேபோன்று 16 ஆண்டுகள் கழித்து ஈவ் வில்லி மரபணு பரிசோதனையை மேற்கொண்டார்.

பரிசோதனையின் முடிவுகள் அவரை கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாக்கின. ஏனென்றால் அவருக்கு செயற்கை உயிரணு அளித்தவர் தன்னுடைய தாயான மார்கோ வில்லியம்ஸின் மருத்துவரே ஆவார் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவரையும், மருத்துவரின் கிளினிக்கையும் தொடர்புகொண்டபோது அவர்கள் வில்லிக்கு சரியான முறையில் பதிலளிக்கவில்லை. 

இதுபோன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் நிறைய நிகழ்ந்து வருகின்றன. தங்களிடம் வரும் பெண்களுக்கு தங்களின் உயிரணுவை வைத்துக்கொண்டே சில மருத்துவர்கள் குழந்தைகளை பெற்று தருகின்றனர். இது மிகவும் வன்மையாக கண்டிக்க கூடியதாகும் என்று அமெரிக்கா நாட்டின் பல்வேறு மாகாணங்களில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.