வகுப்பறையில் இருந்து வந்த அலறல் சத்தம்..! மாணவியிடம் ஆசிரியர் செய்யும் வேலையா இது? நாகர்கோவில் திகுதிகு!

நாகர்கோவிலில் பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி வழங்கியுள்ளனர்.


நாகர்கோவிலில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் விடுமுறை நாளான நேற்றைய தினம் பிளஸ் டூ மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்றுள்ளன.

சிறப்பு வகுப்புகள் முடிந்த பின்பு மாணவ-மாணவிகள் தங்களது இல்லத்திற்கு சென்றனர். மாணவ மாணவிகளை வீட்டிற்கு அனுப்பி வைத்த பின்பு ஆசிரிய பெருமக்களும் உங்களுடைய வீட்டிற்கு சென்றுள்ளனர்.

பள்ளி முடிந்து அனைவரும் தங்களது வீட்டிற்கு சென்ற பின்பு பள்ளியில் இருந்து ஒருவிதமான அலறல் சத்தம். அந்த சத்தத்தை கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் பள்ளிக்கு ஓடிச் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவரிடம் ஆசிரியர் ஒருவர் தவறாக நடந்து கொண்டதை பார்த்த பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த ஆசிரியர் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார் அதனால்தான் அந்த மாணவி அலரி இருக்கிறாள்.

அங்கிருந்த பொதுமக்கள் அந்த ஆசிரியரை பள்ளிக்கு வெளியே இழுத்துவந்து தர்மடி தந்துள்ளனர். மேலும் அங்கிருந்த பொதுமக்கள் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்த ஆசிரியரை கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். 

 போலீசார் அந்த ஆசிரியரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் பொழுது கூடியிருந்த பொதுமக்கள் தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்தனர். தற்போது அந்த வீடியோ பதிவு மற்றும் புகைப்படங்கள் ஆகியவை சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மாணவர்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டிய ஆசிரியர்கள் இம்மாதிரியான கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவது வேதனை அளிப்பதாகவும் பலரும் கூறி வருகின்றனர்.

மேலும் இதனை பார்த்த கல்வி துறையை சார்ந்த உயரதிகாரிகள் உடனடியாக அந்த ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.